'வாடி பொட்டப்புள்ள வெளியே' பாடலுக்கு மரண குத்து குத்திய ஷிவானி.. காட்டுத் தீ போல் பரவும் வீடியோ!
சென்னை: பிக்பாஸ் பிரபலமான ஷிவானி நாராயணன் வடிவேலுவின் பாடலுக்கு மரண குத்து குத்தியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு மற்றும் கடைக்குட்டி சிங்கம் ஆகிய சீரியல்களில் நடித்தவர் ஷிவானி நாராயணன்.
ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்துள்ளார் ஷிவானி நாராயணன். இந்நிலையில் அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

வாயை திறக்கவில்லை
இதில் பாலாஜியுடன் நெருக்கமாக பழகினார் ஷிவானி நாராயணன். இதனால் சமூக வலைதளங்களில் ஓட்டப்பட்டார். அதேபோல் பிக்பாஸ் வீட்டிலும் எதற்கும் பெரிதாக வாயை திறக்காமல் இருந்தார் ஷிவானி.

மிக்சர் என்று விமர்சனம்
இதனால் மிக்சர் என்று விமர்சிக்கப்பட்டார். பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த ஷிவானியின் அம்மாவும் பாலாஜிக்கு ஆயா வேலைதான் செய்கிறாய் விளையாடவே இல்லை என விளாசினார். ஆனால் அவரையும் விமர்சித்தனர் நெட்டிசன்கள்.

ஹோம்ளி லுக்
பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்ததை முன்னிட்டு சமூக வலைதளங்களில் மீண்டும் ஆக்ட்டிவாகிவிட்டார் ஷிவானி நாராயணன். தொடர்ந்து கிளாமர் மற்றும் ஹோம்ளி லுக் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.
வாடி பொட்டப்புள்ள
மேலும் தான் டான்ஸ் ஆடும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார் ஷிவானி நாராயணன். அந்த வகையில் தற்போது வடிவேலுவின் வாடி பொட்டப்புள்ள வெளியே என் வாலிபத்த நோகடிச்ச கிளியே பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளார் ஷிவானி.

வேற லெவல் டார்லிங்
நடிகர் வடிவேலுவின் ட்ரேட் மார்க் ஸ்டேப்போடு அப்படியே அப்பட்டமாக ஆடியிருக்கிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள், வேற லெவல் டார்லிங் ஃபென்டாஸ்டிக் என புகழ்ந்து தள்ளியுள்ளனர்.

குவியும் லைக்ஸ்..
ஷிவானி தனது இந்த டான்ஸுக்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட கமெண்டுகளை பெற்றுள்ளார். ஏழரை லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்களையும் பெற்றுள்ளார் ஷிவானி. ஷிவானியின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











