மேகம் கருக்காதா பாட்டுக்கு ஷிவானி யார் கூட டான்ஸ் ஆடியிருக்காங்க பாருங்க.. டிரெண்டாகும் வீடியோ!

சென்னை: பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளர் ஷிவானி நாராயணன் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற மேகம் கருக்காதா பாடலுக்கு சோபாவில் அமர்ந்தபடியே நடனமாடியுள்ள வீடியோ டிரெண்டாகி வருகிறது.

சின்னத்திரை நடிகையாக வலம் வந்த ஷிவானி நாராயணன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினிமாவில் படு பிசியாகி விட்டார்.

கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் மூலம் சில்வர் ஸ்க்ரீனில் அறிமுகமான ஷிவானி நாராயணன் கைவசம் தற்போது ஏகப்பட்ட பெரிய படங்கள் உள்ளன.

முதல் படமே 100 நாள்

முதல் படமே 100 நாள்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் 100வது நாள் வெற்றி விழா சென்னையில் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த படத்தின் மூலம் தான் பிக் பாஸ் புகழ் ஷிவானி நாராயணன் சினிமாவில் அறிமுகமானார். விஜய்சேதுபதியின் 3 மனைவிகளில் ஒருவராக ஷிவானி நடித்த நிலையில், அவரது முதல் படமே 100 நாட்கள் ஓடி சாதனை படைத்து விட்டது.

வடிவேலுவுக்கு ஜோடி

வடிவேலுவுக்கு ஜோடி

விக்ரம் படத்தைத் தொடர்ந்து ஆர்ஜே பாலாஜியின் வீட்ல விசேஷம் படத்தில் ஒரு பாடலுக்கு நடமாடிய ஷிவானி நாரயாணன் அடுத்ததாக சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிப்பில் உருவாகி வரும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும், வெற்றி உடன் பம்பர் படத்திலும் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

விஜய்சேதுபதி படம் எப்போ வரும்

விஜய்சேதுபதி படம் எப்போ வரும்

இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் புதிய படத்திலும் ஷிவானி நாராயணன் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். அனு க்ரீத்தி வாஸ் அந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். குக் வித் கோமாளி புகழ் காமெடியனாக நடித்து வரும் அந்த படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வந்த நிலையில், எப்போ வெளியே வரும் என்றே தெரியவில்லை.

மேகம் கருக்காதா பாட்டுக்கு

மேகம் கருக்காதா பாட்டுக்கு

இந்நிலையில், ஷிவானி நாராயணன் தனது செல்ல நாய்க்குட்டி வோட்காவுடன் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற மேகம் கருக்காதா பாடலுக்கு சோபாவிலேயே தனது செல்ல நாய்க்குட்டியை கொஞ்சியபடியே க்யூட்டாக நடனமாடிய வீடியோவை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை அள்ளி வருகிறார்.

கட்டிப்புரண்டு முத்தம்

கட்டிப்புரண்டு முத்தம்

தனது செல்ல நாய்க்குட்டியுடன் கட்டிப்புரண்டு ஹேண்ட் ஷேக் செய்து அதற்கு முத்தம் கொடுக்கும் காட்சிகள் எல்லாம் அந்த வீடியோவில் இடம்பெற்றிருப்பதை பார்த்த ஷிவானி நாராயணனின் ரசிகர்கள் ரொம்பவே காண்டாகி உள்ளனர். ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா உள்ளிட்ட பிரபலங்கள் இந்த வீடியோவுக்கு லைக் போட்டுள்ளனர்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X