Don't Miss!
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்க இந்த விஷயங்கள மறைப்பதில் கில்லாடியாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- News
தீர்ப்பால் ஓபிஎஸ் நிம்மதி பெருமூச்சு விட முடியாது.. அடுத்து அப்பீல்தான்.. எடப்பாடி தரப்பு பரபர ரெடி!
- Sports
"அவங்க மேல தனி கவனம் வைங்க".. லக்ஷ்மணுக்கு மும்பையில் இருந்து பறந்த கட்டளை.. என்ன காரணம் தெரியுமா?
- Finance
கட்டிப்பிடித்து விலா எலும்புகளை உடைத்த ஊழியர்.. இப்படி கூடவா நடக்கும்..?!
- Technology
WhatsApp-இன் டெலிட் மெசேஜ் அம்சத்தில் புதிய விருப்பம்; மக்கள் வரவேற்பு!
- Automobiles
'நம்புங்க' எனும் பெயரில் புதுமுக இ-ஸ்கூட்டரை அறிமுகம் செய்த பிரபல நிறுவனம்... இதோட விலை லட்சத்துக்கும் கம்மி!
- Travel
உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தில் பறந்த இந்திய தேசக் கொடி!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
சில்வர் ஸ்க்ரீனில் ஷிவானி நாராயணன்.. விஜய்சேதுபதியின் மனைவியா என்ன அழகா இருக்காரு பாருங்க!
சென்னை: பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளைக் கொண்ட நடிகை ஷிவானி நாராயணன் கோலிவுட்டில் விக்ரம் படம் மூலம் அறிமுகமாகி உள்ளார்.
நடிகர் விஜய்சேதுபதியின் மனைவியாக ஷிவானி நடித்துள்ள நிலையில், அவரது புகைப்படங்கள் மற்றும் படத்தில் அவர் விஜய்சேதுபதியுடன் இணைந்து நடித்த காட்சிகளை அவரே தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸில் பதிவிட்டுள்ளார்.
ஷிவானி நாராயணனை சில்வர் ஸ்க்ரீனில் பார்த்த ரசிகர்கள் 'தலைவி' என ஹாஷ்டேக் போட்டு கொண்டாடி வருகின்றனர்.
தொலைந்து
போன
உயர்ரக
பைக்..
புது
பைக்
வாங்கி
கணவருக்கு
பிறந்தநாள்
பரிசாக
கொடுத்த
கோமாளி!

கமல் கொடுத்த வாய்ப்பு
சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்த ஷிவானி நாராயணன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் முன்னரே 2 மில்லியன் ரசிகர்களுடன் உள்ளே நுழைந்தார். பிக் பாஸ் முடிந்ததும் கமல்ஹாசன் நடிப்பில் உருவான விக்ரம் படத்தில் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

சில்வர் ஸ்க்ரீனில் ஷிவானி
சின்னத்திரையில் ஷிவானியை கொண்டாடி வந்த அவரது ரசிகர்கள் விக்ரம் படத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ள ஷிவானி நாராயணனை சில்வர் ஸ்க்ரீனில் பார்த்து கொண்டாடி வருகின்றனர். அதிலும், முதல் படத்திலேயே கமல்ஹாசன், விஜய்சேதுபதி, சூர்யா, பகத் ஃபாசில் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படத்தில் வாய்ப்பு கிடைத்ததில் ரொம்ப சந்தோஷத்தில் உள்ளார் ஷிவானி.

விஜய்சேதுபதிக்கு மனைவி
விக்ரம் படத்தில் விஜய்சேதுபதி சந்தனம் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு மொத்தம் மூன்று மனைவிகள். அதில், ஒரு மனைவியாக அழகு பதுமையாக ஷிவானி நாராயணன் நடித்துள்ளார். ஷிவானிக்கு துப்பாக்கிச் சுட விஜய்சேதுபதி சொல்லிக் கொடுக்கும் காட்சிகள் தற்போது வெளியாகி டிரெண்டாகி வருகின்றன.

3 மனைவிகள்
3 மனைவிகளுடன் போதை வாழ்க்கை வாழ்கிறார் சந்தனம். ஷிவானி நாராயணன், மைனா நந்தினி மற்றும் விஜே மகேஷ்வரி என மூன்று பேரும் விஜய்சேதுபதியின் மனைவிகளாக நடித்துள்ளனர். விஜய்சேதுபதிக்கு அவர்கள் சேவகம் செய்யும் காட்சிகள் எல்லாம் படத்தில் அட்டகாசமாக அமைந்துள்ளது. ஒரு பெரிய குடும்பத்துடன் வாழும் விஜய்சேதுபதி எடுத்துக் கொள்ளும் க்ரூப் போட்டோ காட்சி ஷிவானியே தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஷேர் செய்துள்ளார்.

அடுத்தும் விஜய்சேதுபதியுடன்
இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் அடுத்ததாக விஜய்சேதுபதி நடித்து வரும் படத்திலும் நடிகை ஷிவானி நாராயணன் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த படத்தின் புகைப்படங்களை வெளியிட்ட ஷிவானி, விக்ரம் படத்தில் நடிப்பதை படு சீக்ரெட்டாகவே மெயின்டெயின் பண்ணது குறிப்பிடத்தக்கது.

பல படங்கள்
விக்ரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி உள்ள ஷிவானி நாராயணன் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய்சேதுபதி நடித்து வரும் படத்தில் நடித்து வருகிறார். 8 தோட்டாக்கள் வெற்றிக்கு ஜோடியாக பம்பர் படம், வடிவேலுவுடன் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் மற்றும் ஆர்ஜே பாலாஜியுடன் ஒரு படம் என கைவசம் பல படங்களை வைத்து இருக்கிறார். மற்ற பிக் பாஸ் பிரபலங்களை அசால்ட்டாக ஓவர்டேக் செய்து விட்டு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.