ரசிகர்கள் கேட்ட அந்த கேள்வி.. கவர்ச்சி போட்டோக்களை அதிரடியாய் டெலிட் செய்த ஷிவானி நாராயணன்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த கையோடு ஷிவானி நாராயணன் தன்னுடைய கவர்ச்சி போட்டோக்கள் அனைத்தையும் டெலிட் செய்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலில் நடித்தவர் ஷிவானி நாராயணன். அந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகர் ஆசிம்மை காதலித்தார்.

ஆனால் ஆசிம் ஷிவானியின் காதலை ஏற்க மறுத்ததால் அந்த சீரியலில் இருந்து விலகினார். தொடர்ந்து மாடலிங் என பிஸியாக இருந்து வரும் ஷிவானி, சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.

கிளாமர் போட்டோக்கள்

கிளாமர் போட்டோக்கள்

இன்ஸ்டாகிராமில் மட்டும் 25 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ள ஷிவானி, நாள்தோறும் தனது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

பாலாஜிக்கு மசாஜ்

பாலாஜிக்கு மசாஜ்

இதில் சக போட்டியாளரான பாலாஜி முருகதாஸுடன் நெருக்கமாக பழகினார். பாலாஜிக்கு மசாஜ் செய்வது, ஊட்டி விடுவது, காலையில் அவரை எழுப்பி விடுவது என இருந்து வந்தார்.

ஹவுஸ்மேட்ஸ் கிண்டல்

ஹவுஸ்மேட்ஸ் கிண்டல்

மேலும் இருவரும் ஒருவரை ஒருவர் நாமினேட் செய்யக் கூடாது என்றும் இருந்து வந்தனர். இதனால் இருவருக்கும் காதல் என்ற பேச்சு எழுந்தது. பிக்பாஸ் வீட்டில் இருந்த சக ஹவுஸ்மேட்டுகளான ரம்யா உள்ளிட்ட சிலரே ஷிவானியை பாலாஜியை வைத்து கிண்டலடித்தனர்.

 ஆயா வேலை செய்ய வந்தியா?

ஆயா வேலை செய்ய வந்தியா?

இந்நிலையில் ஃபிரீஸ் டாஸ்க்கின் போது பிக்பாஸ் வீட்டிற்கு வந்த ஷிவானியின் அம்மா, பாலாஜியுடன்ன பழகுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பாலாஜிக்கு ஆயா வேலை செய்யதான் இங்கு வந்தியா? என் மானத்தையே வாங்கிவிட்டாய் என ரைடு விட்டார்.

அப்போது மானம் போகவில்லையா?

அப்போது மானம் போகவில்லையா?

இதனை பார்த்த ரசிகர்கள், ஏன் மகள் கிளாமர் போட்டோக்களை இன்ஸ்டாவில் ஷேர் செய்த போதெல்லாம் மானம் போகவில்லையா என ஷிவானியின் அம்மாவான அகிலாவையும் விளாசினர். ஷிவானி பிக்பாஸ் வீட்டில் இருந்த போது அவருடைய போட்டோவை இன்ஸ்டாவில் ஷேர் செய்து வந்தார் ஷிவானியின் அம்மா.

போட்டோக்கள் நீக்கம்

போட்டோக்கள் நீக்கம்

ஆனால் பிக்பாஸ் வீட்டிற்கு சென்று வந்த பிறகு அவரது போட்டோக்களை ஷேர் செய்யவில்லை. இதனை பார்த்த ரசிகர்கள் ஷிவானி மீது கோபமா என கேட்டு வந்தனர். இந்நிலையில் ஷிவானி தனது கிளாமர் போட்டோக்கள் பலவற்றை டெலிட் செய்துள்ளார்.

Recommended Video

TRIP MOVIE PRESS MEET | ACTRESS SUNAINA SPEECH | FILMIBEAT TAMIL
கிளாமர் போட்டோக்கள்

கிளாமர் போட்டோக்கள்

மேலும் இனிமேல் சமூக வலைதளங்களில் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் ஷிவானி முடிவு செய்துள்ளாராம். அதோடு இனிமேல் அளவுக்கு மீறிய கிளாமர் போட்டோக்களை வெளியிட போவதில்லை என்றும் ஷிவானி முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X