பூஜா ஹெக்டே ரூட்டை பிடித்த ஷிவானி நாராயணன்.. குட்டி உடையில் செம குத்தாட்டம்.. டிரெண்டாகும் வீடியோ!

சென்னை: ஆர்ஜேபாலாஜி, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி மற்றும் சத்யராஜ் நடிப்பில் உருவாகி உள்ள வீட்ல விசேஷம் படத்தின் 'கல்யாண பாட்டுக்கு' நடிகை ஷிவானி நாராயணன் குத்தாட்டம் போட்டு வெளியிட்டுள்ள ரீல் டிரெண்டாகி வருகிறது.

போனி கபூர் தயாரிப்பில் ஆர்ஜே பாலஜி மற்றும் என்ஜே சரவணன் இயக்கத்தில் உருவாகி உள்ள வீட்ல விசேஷம் திரைப்படம் வரும் ஜூன் 17ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான இந்தி படமான பதாய் ஹோ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் இந்த படம்.

ஆர்ஜே பாலாஜி படத்தில் ஷிவானி

ஆர்ஜே பாலாஜி படத்தில் ஷிவானி

ஆர்ஜே பாலாஜி உடன் ஷிவானி நாராயணன் எடுத்த ஒரு புகைப்படத்தை நீண்ட நாட்களுக்கு முன்னரே பதிவிட்டு இருந்தார். அவருடன் ஜோடி போட்டு நடித்துள்ளாரா? என கேள்விகள் கிளம்பின. இந்நிலையில், வீட்ல விசேஷம் படத்தில் இடம்பெற்றுள்ள 'கல்யாண பாட்டு' பாடலில் தான் ஷிவானி நாராயணன் நடனமாடி உள்ளார். சமீபத்தில் வெளியான அந்த பாடல் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.

ஷிவானி நடனம்

சாரே சாரே சாம்பாரே.. சார் வீட்டு கல்யாணம் எனத் தொடங்கும் பாடலுக்கு ஷிவானி நாராயணன் செம க்யூட்டாக நடனமாடியுள்ளார். லிப் சிங்க் தான் சற்றே சரியில்லாதது போலத் தெரிகிறது. ஆனாலும், தற்போது இந்த பாடல் தான் கல்யாண வீடுகளில் விரும்பி கேட்கும் பாடலாக மாறி வருகிறது. மேலும், இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட ரீல்கள் டிரெண்டாகி வருகின்றன.

பூஜா ஹெக்டேவை போலவே

பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடிய பூஜா ஹெக்டேவே, அந்த பாடலை டிரெண்ட் செய்ய வேண்டும் என்பதற்காக தனியாக ஒரு இன்ஸ்டா ரீல் போட்டிருப்பார். அதே போல தற்போது ஷிவானி நாராயணன் குட்டி உடையை அணிந்து கொண்டு தனது வீட்டின் பிரம்மாண்ட டிவியில் அந்த பாடலை ஓட விட்டு அதற்கு நடனமாடி உள்ள வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.

படு பிசி

படு பிசி

சமீபத்தில் கமல்ஹாசனின் விக்ரம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமான ஷிவானி நாராயணன் ஒரே மாதத்தில் ஆர்ஜே பாலாஜியின் வீட்ல விசேஷம் படத்திலும் தலை காட்ட உள்ளார். பம்பர், விஜய்சேதுபதி - பொன்ராம் படம், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என அடுத்தடுத்து பல படங்களை கை வசம் வைத்து படு பிசியாக உள்ளார்.

வேற லெவல் புரமோஷன்

வேற லெவல் புரமோஷன்

வீட்ல விசேஷம் படத்திற்காக இயக்குநரும் ஹீரோவுமான ஆர்ஜே பாலாஜி திடீரென ஒரு வளைகாப்பு வீட்டுக்கே சென்று புரமோஷன் செய்திருந்தார். மேலும், தனது டிரேட்மார்க்கான கிராஸ் டாக்கையும் மீண்டும் கையில் எடுத்து இருக்கிறார். பதாய் ஹோ பாலிவுட்டில் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில், இங்கேயும் அந்த படத்தின் தமிழ் ரீமேக்கான வீட்ல விசேஷம் படம் வெற்றி அடையும் என முழு நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X