Shivani Narayanan: ஒல்லி பெல்லியாக மாறிய ஷிவானி நாராயணன்.. “ரங்கு ரக்கர” பாடலுக்கு என்னவொரு குத்து!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஷிவானி நாராயணன் தமிழ் சினிமாவில் 5 படங்களில் இதுவரை நடித்துள்ளார். அடுத்த படத்துக்காக உடல் எடையை கணிசமாக குறைக்க ஜிம்மில் தீவிரமாக வொர்க்கவுட் செய்து வரும் ஷிவானி நாராயணன் தெலுங்கில் தீயாக பரவும் பாடல் ஒன்றுக்கு நடனமாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.
ஒல்லி பெல்லி சைஸுக்கு உடற்பயிற்சி செய்து மாறிய ஷிவானியை பார்த்து அவரது லேட்டஸ்ட் வீடியோவுக்கு கீழ் ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. பிக் பாஸ் பிரபலங்களை தொடர்ந்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் ஃபாலோ செய்து வரும் நிலையில், ஷிவானி நாராயணனுக்கு சுமார் 4 மில்லியன் ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் உள்ளனர்.

வொர்க்கவுட் வீடியோ மற்றும் பாடல்களுக்கு ரீல்ஸ் போடுவது என சதா சர்வ காலமும் தற்போது இன்ஸ்டாகிராமிலேயே குடி கொண்டிருக்கிறார் ஷிவானி நாராயணன்.
பிக் பாஸ் சீசன் 4: சீரியல்களில் நடித்து வந்த ஷிவானி நாராயணனுக்கு இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் டான்ஸ் வீடியோக்கள் மற்றும் கிளாமர் புகைப்படங்களால் மில்லியன் கணக்கில் ஆரம்பத்திலேயே ரசிகர்கள் குவிந்தனர். அதனை பயன்படுத்தி பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக பங்கேற்றார். அந்த சீசன் முடிந்ததுமே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கும் சான்ஸ் கிடைத்தது.
வரிசையாக படங்கள்: விக்ரம் படத்தை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி, அபர்ணா பாலமுரளி நடித்த வீட்ல விசேஷங்க படத்தில் "சாரே சாரே சாம்பாரு" பாடலுக்கு நடனமாடினார். வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும், விஜய் சேதுபதியின் டிஎஸ்பி படத்திலும் நடித்த ஷிவானி கடைசியாக கடந்த ஆண்டு வெளியான வெற்றி நடித்த பம்பர் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அந்த படத்துக்குப் பிறகு இன்னும் தனது அடுத்த பட அறிவிப்பை ஷிவானி அறிவிக்கவில்லை.
அம்மாவுடன் ஜிம்முக்கு: ஷிவானியின் அம்மா ஆரம்பத்தில் மகளின் பாதுகாப்புக்காக ஜிம்முக்கு சென்று வந்த நிலையில், சமீபத்தில் மகளுக்கு இணையாக அவரும் வொர்க்கவுட் செய்யும் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கின. சாத்தூரை சேர்ந்த அகிலாவா இது என அவரது ஊர்காரங்களே ஆச்சர்யப்பட்டு போயிருப்பார்கள்.
ஒல்லி பெல்லி: தொடர்ந்து ஜிம்முக்கு சென்று தனது இடுப்பளவை சைஸ் ஜீரோவுக்கே மாற்றி விட்டார் ஷிவானி நாராயணன். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது குண்டாக இருந்தார் என பாலாஜி முருகதாஸ் எல்லாம் கலாய்த்திருப்பார். படங்களிலும் பப்ளியாக வலம் வந்த ஷிவானி ஸ்லிம் பியூட்டியாக தற்போது மாறியுள்ளார். லாஸ்லியா, ஷிவானி போன்ற பிக் பாஸ் பிரபலங்கள் ஸ்லிம் ஆனால் தான் பட வாய்ப்புகள் கிடைக்கும் என ஹெவியாக நம்புகிறார்களா? என்கிற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்.
ரங்க ரக்கர: வெயிட் லிஃப்ட் தூக்கும் ஜிம் வீடியோவுக்கும் அந்த "பிஃபோர் கோல்ட், பிஃபோர் பிரேக்.. ரங்கு ரக்கர.. ரக்கர ரக்கர" பாடலை இன்ஸ்டாகிராம் ரீலுக்கு பயன்படுத்தியிருந்த ஷிவானி தற்போது அந்த பாடல் டிரெண்டாகி வருவதால் அந்த பாடலுக்கு நடனமாடும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். டான்ஸ் ஆடுவது சின்ன வயசுல இருந்தே ஷிவானிக்கு ரொம்பவே பிடிக்கும் என பல இடங்களில் அவர் சொல்லியிருக்கிறார். அவரது ஆட்டத்தை பார்த்து ரசிகர்கள் ஆடிப்போயுள்ளனர்.


Click it and Unblock the Notifications











