பண்றதையும் பண்ணிட்டு.. என்னம்மா கதைவிடுது ஷிவானி.. நல்லா கோர்த்துவிட்ட கமல்!
சென்னை: சம்பந்தபட்டவர்களே சொல்லுங்கள் என கமல் சாட்டையை சுழற்ற ஆரம்பித்ததும் இஞ்சி தின்ன குரங்கு போல மாறிய ஷிவானி, தனது விளக்கத்தை கூற ஆரம்பித்தார்.
ஹானஸ்ட்டுக்கும் ஹானஸ்ட்டிக்கும் என்ன வித்தியாசம் என கேபியிடம் கமல் கேட்க, கேபியும், பாலாவும் அதற்கான விளக்கங்களை கொடுத்தனர்.
வெளியே நடந்தது எனக்குத் தெரியுமே, என கமல் சொன்னதும், அதை சொல்லுங்க சார் என சக போட்டியாளர்கள் கமலிடம் கோரிக்கை வைக்க ஷிவானியின் முகம் முற்றிலுமாக சிவந்தது.

தீபாவளி கொண்டாட்டம்
பிக் பாஸ் வீட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாரம் முழுக்க ஏகப்பட்ட கொண்டாட்டங்களாகவே சென்றன. ஆனாலும், அங்கொரு இங்கொரு என சில பிரச்சனைகளூம் சுவாரஸ்யத்தை கூட்டவும் கமலுக்கு வார இறுதியில் பஞ்சாயத்து பண்ணும் வேலையை கொடுக்கவும் இருந்தன.

முதல் புரமோ
ஞாயிற்று கிழமை ஷோவுக்கான முதல் புரமோவில் பாலாவை எண்ணெய் சட்டியில் போட்டு வறுத்தெடுத்த கமல், இரண்டாவது புரமோவில் கேபியுடன் எகிறி சண்டை போட்ட ஷிவானியை எண்ணெய் சட்டியில் போட்டு பொறித்து எடுக்க ஆரம்பித்த காட்சிகளை பார்த்ததுமே ரசிகர்கள் துள்ளி குதித்தனர். புரமோவில் மட்டுமின்றி ஷோவிலும் சிறப்பான பல சம்பவங்கள் அரங்கேறின.

கேபிக்கு தெரியாது
ஹானஸ்ட்டுக்கும் ஹானஸ்ட்டிக்கும் என்ன வித்தியாசம் சொல்லுங்க கேபி என கமல் கேட்க, பாலா திருடுனதை தான் பார்த்து விட்டு, கேட்டேன் என்றும், அதற்கு பாலா விளக்கம் சொல்லிவிட்டு வெளியே போனான். வெளியே என்னாச்சுன்னு தெரியல, திரும்பி வந்து மறுபடியும் கத்துனான் என கேபி தனக்கு வெளியே நடந்தது பற்றி தெரியாது என்றார்.

பற்றவைத்த கமல்
வெளியே என்ன நடந்தது தெரியுமா? என கேட்டுவிட்டு, எனக்குத் தெரியுமே என கமல் போட்ட ஸ்டெப்புக்கு, ரியோ, அர்ச்சனா எல்லாம் அப்படி பாராட்டி சிரித்தனர். ரம்யா பாண்டியன், கேபி எல்லாம் நடந்ததை சொல்லுங்க என கேட்டதும், ஷிவானியின் தலை டோட்டலாக தொங்கிடுச்சு. பாலா, ஷிவானி சுச்சி மூன்று பேரும் அந்த முழி முழித்தனர்.

ஷிவானி விளக்கம்
சைலன்ட்டா வெளியே போன பாலாவை வைலன்ட்டாக்கி அனுப்பியது யார் என்று சொல்லாமல் சம்பந்தப்பட்டவர்கள் சொன்னா நல்லா இருக்கும் என கமல் சொன்னவுடம் ஷிவானி, தன் பக்கம் இருந்த நியாயத்தை விளக்கி சொன்னார். கேபி, திருடர்கள் டாஸ்க்கில் இருப்பது எனக்கு தெரியாது. ஹானஸ்ட் என சொன்னதும், எனக்கு கோபம் வந்தது, அதான் சொன்னேன் என ஷிவானி பேசினார்.

முதல்ல சொன்னதே பாலா தான்
எனக்கு தெரிந்த வரை ஹானஸ்ட் என்கிற வார்த்தையை முதலில் பயன்படுத்தியதே பாலா தான் என கமல் ஒரே போடாக போட்டு, பாலா, ஷிவானி மற்றும் சுச்சி குரூப்புக்கு சின்னதா ஒரு குட்டு வைத்து விட்டு அந்த பிரச்சனையில் இருந்து வேற ஒரு பிரச்சனையை பஞ்சாயத்து பண்ண கிளம்பிவிட்டார்.


Click it and Unblock the Notifications











