ஷிவானியை அப்படியே நிற்க வைத்து.. நச்சுன்னு கிளிக்கிய ரம்யா.. வாவ் போடும் ரசிகர்கள்!

சென்னை : விஜய் டிவி.,யில் ஒளிபரப்பான பகல் நிலவு, ரெட்டை ரோஜா சீரியல்களில் நடித்ததன் மூலம் புகழடைந்தவர் ஷிவானி நாராயணன். சமூக வலைதளங்களில் ஆக்டிவான இவர் தொடர்ந்து தனது கிளாமர் ஃபோட்டோக்களை வெளியிட்டு வருவதால் இன்ஸ்டாகிராமிலும் இவருக்கு ரசிகர்கள் அதிகம்.

Recommended Video

அடுத்து சினிமா கதாநாயகி | BIGG BOSS SHIVANI EXCLUSIVE INTERVIEW | FILMIBEAT TAMIL

அதன் பிறகு விஜய் டிவி.,யில் பிக்பாஸ் சீசன் 4 ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக பங்கேற்றார். ஆரம்பத்தில் யாருடனும் ஒட்டாமல் ஒதுங்கி இருந்த ஷிவானி, பாலாஜியுடன் ரொமான்சில் ஈடுபட்டது போல் காட்டப்பட்டது. இதனால் ஷிவானிக்கு மற்ற போட்டியாளர்கள் செய்த அட்வைஸ், ஆரி - பாலாஜி இடையேயான மோதல் ஆகியவற்றால் இந்நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டிங் எகிறியது.

கடைசியில் பிரகாசித்த ஷிவானி

கடைசியில் பிரகாசித்த ஷிவானி

ஒவ்வொரு வாரமும் ஷிவானி வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி சில வாரங்களுக்கு முன் பிக்அப் ஆன ஷிவானி, அதற்கு பிறகு நடந்த டாஸ்க்களில் முயற்சி எடுத்தது, பலரிடமும் பாராட்டை பெற்றது. அதிலும் கயிற்றை பிடித்துக் கொண்டிருக்கும் டாஸ்க்கில் கடைசி வரை ஷிவானி உறுதியாக நின்றதை அனைவரும் பாராட்டினர்.

வைரலான ஃபோட்டோக்கள்

வைரலான ஃபோட்டோக்கள்

ஷிவானி, சமீபத்தில் தனது தாயாருடன் மாலத்தீவு சென்றிருந்தார். அங்கு எடுத்துக் கொண்ட கவர்ச்சியான ஃபோட்டோ, வீடியோக்களை வெளியிட்டும் ஷிவானி பரபரப்பை கிளப்பினார். பல ஃபோட்டோக்கள் வைரலாகின. இவர் வெளியிட்ட பிகினி ஃபோட்டோக்கள் இவரது ரசிகர்களை குஷிபடுத்தியது.

 ரம்யா பாண்டியன் எடுத்த ஃபோட்டோ

ரம்யா பாண்டியன் எடுத்த ஃபோட்டோ

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில், பிக்பாஸ் 4 ல் சக போட்டியாளராக பங்கேற்ற ரம்யா பாண்டியனை சந்தித்துள்ளார். அப்போது, ஷிவானியை ரம்யா பாண்டியன் அழகாக ஃபோட்டோ எடுத்துள்ளார். இந்த ஃபோட்டோவை ஷிவானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ரம்யாவிற்குள் இப்படி ஒரு திறமையா

ரம்யாவிற்குள் இப்படி ஒரு திறமையா

ஷிவானியின் அந்த அழகான ஃபோட்டோவுடன், ரம்யா பாண்டியனின் ஃபோட்டோகிராஃபி திறமையையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். ரம்யா பாண்டியனுக்குள் இப்படி ஒரு ஃபோட்டோகிராஃபி திறமை ஒளிந்துள்ளதை ஷிவானி வெளிக்காட்டி உள்ளார். இந்த ஃபோட்டோவை இதுவரை ஒன்றரை லட்சதத்திற்கும் அதிகமானவர்கள் லைக் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X