பாலாவுக்கு ஊட்டி விட்ட ஷிவானி.. எல்லாம் அதிகாரத் திமிரா? காதல் பவரான்னு தெரியலையே?

சென்னை: பிக் பாஸ் வீட்டில் அதிக பவர் கிடைத்துள்ள அர்ச்சனா அண்ட் கோ அணியினர், மற்ற ஹவுஸ்மேட்களை படாத பாடு ஒரு பக்கம் படுத்திக் கொண்டு இருக்க, மற்றொரு பக்கம், பெட்டில் படுத்துக் கொண்டு ஷிவானியை ஊட்ட சொல்லி ரொமான்ஸ் செய்யும் பாலாவின் அலப்பறை தாங்க முடியவில்லை.

இந்த வருட பிக் பாஸ் நிகழ்ச்சியில், இவங்க ரெண்டு பேர வச்சுத் தான் ரொமான்ஸ் போர்ஷனை ஓட்டணும்னு பிக் பாஸ் முடிவு பண்ணிட்டார் போலவே தெரிகிறது.

சனம் பாலா, பாலா என வழிந்தாலும், பாலாவும் ஷிவானியும் நல்லா செட் ஆகிட்டாங்க..

சனம் தோளில் கை போட்டுக் கொண்டு

சனம் தோளில் கை போட்டுக் கொண்டு

சனம் ஷெட்டி தோளில் கை போட்டுக் கொண்டு, செம ஹாயாக நடந்து வந்தாலும், எதிரே ஷிவானி வந்ததும் அவரைத் தான் பாலா லுக் விட்டார். ஷிவானியை பாலா பார்த்ததும் பொறாமை தாங்காத சனம் ஷெட்டி, அங்கே பார்க்காத இங்க பாரு என சொல்ல, நான் இங்க தான் பார்க்கிறேன் என பாலா ஒரே நேரத்தில் ஏகப்பட்ட பந்துகளில் சிக்ஸர் அடிக்கிறார்.

மொக்கை டார்ச்சர்

மொக்கை டார்ச்சர்

பாலா வேற லெவலில் அரசனாக என்ஜாய் பண்ணிக் கொண்டிருக்கும் நேரத்தில் நம்ம இம்சை அரசன் ரியோ ராஜ், நம்மை பார்க்கும் போதெல்லாம் வித்தியாசமாக ஒலி எழுப்பி வணக்கம் வைக்க வேண்டும், தொடையை தட்ட வேண்டும் என குழந்தைங்க பெட்சீட்டை தோளில் கட்டிக் கொண்டு ராஜா விளையாட்டு விளையாட மாட்டாங்க அந்த மாதிரி மொக்கை டார்ச்சருக்கு பிளான் போட்டுக் கொண்டு இருந்தார்.

போடா போடா புண்ணாக்கு

போடா போடா புண்ணாக்கு

அரச குடும்பத்தினர் டைனிங் டேபிளில் உட்கார்ந்து கொண்டு சாப்பிடும் போது, ஷிவானியை அழைத்து சோம்ஸ் ஆட சொன்னார். ரம்யாவை பாட சொன்னார்கள். ரம்யா வந்து ஷிவானியை பார்த்து பாடுவது போல, அரச குடும்பத்தினரை பார்த்து போடா போடா புண்ணாக்கு என பாட, அதற்கும் சூப்பரா ஸ்டெப் போட்டு ஷிவானி டான்ஸ் ஆடுனாங்க..

ஊட்டி விட்ட ஷிவானி

ஊட்டி விட்ட ஷிவானி

அனிதா சம்பத்தை பிடித்துக் கொண்டு நகர் வலம் செல்வதாக ரியோ ஒரு பக்கம் மொக்கையாக கேமை விளையாட, ரியல் அரசனாக, படுத்துக் கொண்டு ஷிவானியை தனக்கு ஊட்டி விட பாலா பணித்து கொண்டிருந்த விதத்தை பார்த்தாலே பலருக்கு பத்திக் கொண்டு வந்திருக்கும்.

பிக் பாஸ் சொல்லியும் கேட்கல

பிக் பாஸ் சொல்லியும் கேட்கல

அரச குடும்பத்தினர் டாஸ்க் தற்காலிகமாக ஒத்தி வைக்கப் படுகிறது என்று சொன்னதும், இதுவரை அராஜகம் பண்ணிக் கொண்டிருந்த அவர்களை மற்றவர்கள் ஓட ஓட விட்டு விரட்டி அடித்துக் கொண்டு இருந்தனர். ஆனால், அப்பவும் ரொமான்ஸ் மாறாம ஷிவானி பாலாவுக்கு ஊட்டி விட்டுக் கொண்டிருந்தது எல்லாம் பார்க்க முடியல என நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X