ஒரே குடைக்குள்.. ரியோவுக்கு லிப்ட் தந்த ஷிவானி நாராயணன்.. எல்லாம் பாலாவை பிரிந்ததாலா?

சென்னை: நடிகர் ரியோவுக்கு ஷிவானி நாராயணன் லிப்ட் தந்த காட்சியை பிக் பாஸில் எடிட்டர் வைக்க குறிப்பாக ஏதோ காரணம் இருப்பதாகவே ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Recommended Video

கொலுத்தி போட்ட பிக் பாஸ்! இந்த வாரம் வெளியேற போவது யார்?

கொட்டும் மழையிலும் பிக் பாஸ் போட்டியாளர்கள் கார்டன் ஏரியாவில் மணிக்கூண்டு டாஸ்க் செய்து வருகின்றனர்.

பாலாவுக்கும் ஷிவானிக்கும் ஏற்பட்ட பிரிவு காரணமாக, இப்போ தான் மேடம் கொஞ்சம் கொஞ்சமாக மற்ற போட்டியாளர்கள் கூட பேச ஆரம்பித்துள்ளனர்.

பிரிவோம் சந்திப்போம்

பிரிவோம் சந்திப்போம்

பாலாஜி முருகதாஸ் ஷிவானி நாராயணன் உண்மையாவே லவ் பண்ணாங்களா? பண்ணலயா? பிரிஞ்சுட்டாங்களா? பிரியலையா? என பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் பலருக்கும் பைத்தியம் பிடித்து விடும் போல, காட்சிகளை மாற்றி மாற்றி எடிட்டர் எடிட் செய்து போட்டு வருகிறார். எடிட்டரும் ஒரு வேலை குழம்பி போய்ட்டாரோ இவங்க பண்ணும் குழப்பத்தால என்றும் கேட்கத் தோன்றுகிறது.

கொட்டும் மழையிலும்

கொட்டும் மழையிலும்

சென்னையை விடாமல் மழை புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், பூந்தமல்லியில் போடப்பட்ட பிக் பாஸ் செட்டை மட்டும் மழை போனா போகுதுன்னு விட்டு விடுமா? என்ன? அங்கேயும் வெளுத்து வாங்குகிறது. ஆனால், பிக் பாஸ் போட்டியாளர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், குடையெல்லாம் பிடித்துக் கொண்டு டாஸ்க் விளையாடி வருவது ஆரோக்கியமான போட்டியாகவே பார்க்கப்படுகிறது..

ஷிவானி லிப்ட்

ஷிவானி லிப்ட்

கொட்டும் மழையில் கார்டன் ஏரியாவில் இருந்து நனையாமல் வீட்டுக்கு செல்ல தனது குடையிலேயே ஷிவானி நாராயணன் ரியோ ராஜுக்கு லிப்ட் கொடுத்த காட்சியை பிக் பாஸ் எடிட்டர் கட் பண்ணாமல், நிகழ்ச்சியில் வைத்திருந்தார். அதற்கு நிச்சயம் ஏதாவது காரணம் இருக்கும் என கமெண்ட்டுகள் பறக்கின்றன.

விலகிய ஷிவானி

விலகிய ஷிவானி

பாலாஜி முருகதாஸை சுற்றியே வலம் வந்துக் கொண்டிருந்த ஷிவானி நாராயணன், இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமாக, ரம்யா டீம் கூடவும், நிஷா கூடவும், ரியோ கூடவும் என மற்ற பிக்பாஸ் போட்டியாளர்கள் உடன் மிங்கிள் ஆக ஆரம்பித்துள்ளார் என்பதை காட்டவே அந்த காட்சியை எடிட்டர் வைத்திருப்பார் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

தப்பிச்சுடு ஷிவானி

தப்பிச்சுடு ஷிவானி

பாலா கூட சேராமல், உன்னோட கேமை நீ விளையாடினால், நிச்சயம் டைட்டில் உனக்குத்தான் என ஷிவானி ஆர்மியினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். பாலாஜி முருகதாஸ், எல்லாரையும் போல ஷிவானியையும் யூஸ் பண்ணிக்கிறான். அது செல்லத்துக்கு தெரிய மாட்டேங்குதுன்னு ரொம்பவே டிவியை பார்த்து ஃபீல் பண்ணி வருவது எல்லாம் டூமச்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X