ஒட்டுமொத்த போஷ் கேங்கும் ஒண்ணா இருக்கே.. பாலாவுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்த ஷிவானி!
சென்னை: ஒட்டுமொத்த போஷ் கேங்குடன் இருக்கும் போட்டோவை ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் பழையபடியே போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார் ஷிவானி நாராயணன்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பாலாவை அவர் மீட் பண்ணாரா? இல்லையா? எனும் கேள்விக்கு தற்போது பதில் அளித்துள்ளார்.

ஒட்டுமொத்த போஷ் கேங்
பாலாஜி முருகதாஸ், ரம்யா பாண்டியன், சம்யுக்தா மற்றும் ஆஜித் என ஒட்டுமொத்த போஸ் கேங்குடன் இருக்கும் போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதன் முறையாக ஷேர் செய்துள்ளார் ஷிவானி நாராயணன். அந்த போஸ்ட்டுக்கு ரம்யா பாண்டியன் உடனடியாக லைக்கும் போட்டுள்ளார்.

பிரண்ட்ஷிப் தான் சொத்து
மேலும், இந்த புகைப்படத்துக்கு கேப்ஷனாக பிரண்ட்ஷிப் தான் சொத்து நமக்கு என பதிவிட்டு, பாலாவும் தானும் வெளியேவும் நண்பர்களாகவே தொடர்வோம் என்பதை குறிப்பால் உணர்த்துவது போலவே இருக்கிறது என ஏகப்பட்ட நெட்டிசன்கள் கண்டுபிடித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

பாலா ஏமாத்திட்டாரு
உங்க கூடவே சுத்துற மாதிரி நடிச்சு, உங்களை டம்மி ஆக்கிட்டு, அவர் ஈஸியா ரன்னர் அப் ஆகிட்டாரு ஷிவானி என்றும், அம்மா பேச்சை கேட்டு நடந்துக்கோங்க, உங்களை பத்தி தப்பா பேசுன அவர் கூட மறுபடியும் இப்படி ஒண்ணா சேர்ந்து சுத்துறது சரியில்லை என்றும் ஏகப்பட்ட நெட்டிசன்கள் அட்வைஸ் செய்து வருகின்றனர்.

பாலா பக்கத்தில்
பாலாஜி முருகதாஸோட ரசிகர்கள் ஏன் பாலா பக்கத்தில நிக்க மாட்றீங்க ஷிவானி, அதுதான் கேம் முடிஞ்சிடுச்சுல்ல, இன்னமும் ஏன் அவரை அவாய்டு பண்றீங்க, ஆஜீத், ரம்யா பாண்டியனுக்கு பக்கத்தில இருக்கிறதுக்கு பதிலா, பாலா பக்கத்தில் இருந்தா இன்னும் இந்த போட்டோ நல்லா இருந்திருக்கும் என்றும் கோர்த்து விடுகின்றனர்.

பச்சைக் கிளி
பிக் பாஸ் கொண்டாட்டத்தில் லுங்கி கட்டிக் கொண்டு ரவுடி பேபியாக ஷிவானி நாராயணன் பர்ஃபார்ம் பண்ணும் போட்டோவை விஜய் டிவி வெளியிட்டு வைரலாக்கிய நிலையில், அதனை தொடர்ந்து, பச்சை நிற சட்டையை அணிந்து கொண்டு பச்சைக் கிளி பச்சையம்மாவாக ஷிவானி நடனமாடும் இன்னொரு போட்டோவையும் வெளியிட்டு வைரலாக்கியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











