Shivani Narayanan: புயல் மழையில் அரை டவுசருடன் ஆட்டம் போட்ட ஷிவானி.. கழுவி ஊற்றும் ஃபேன்ஸ்!
சென்னை: பிக் பாஸ் பிரபலமும் நடிகையுமான ஷிவானி நாராயணன் மிக்ஜாம் புயலில் கார் பார்க்கிங் ஏரியாவுக்கு வந்து ஆட்டம் போட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு லைக்குகளை அள்ளி உள்ளார்.
அவரது வீடியோவை பார்த்து வர்ணித்து ரசிகர்கள் ஒரு பக்கம் கமெண்ட் போட்டு வர, மறுபக்கம் நெட்டிசன்கள் வழக்கம் போல ஷிவானியை ட்ரோல் செய்து வருகின்றனர்.

அவன் அவன் பசிக்கு சாப்பாடு கிடைக்கலைன்னு தவிச்சிட்டு இருக்கான், உனக்கு சிச்சுவேஷன் சாங் கேக்குதா என கலாய்த்துள்ளனர்.
புயலால் புலம்பிய நடிகைகள்: சாதாரண மக்கள் கூட இப்படியெல்லாம் புலம்பி இருக்க மாட்டார்கள். சில பிரபல நடிகைகளே புயல் மழையால் சிக்கித் தவித்து வருவதாகவும் தங்களுக்கு எதையும் செய்யவில்லை என சோஷியல் மீடியாவில் கடந்த சில நாட்களாக புலம்பித் தவித்ததை பார்க்க முடிந்தது. இந்நிலையில், பிக் பாஸ் பிரபலமான ஷிவானி நாராயணன் இந்த புயலை ரசித்துள்ளார்.
மழையில் ஆட்டம் போட்ட ஷிவானி: மிக்ஜாம் புயல் பலரது வாழ்க்கையை சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பல இடங்களில் பந்தாடிய நிலையில், நடிகை ஷிவானி நாராயணன் டிசர்ட் மற்றும் ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு ஆட்டம் போடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
சிச்சுவேஷன் சாங்: மனசுக்குள் ஒரு புயல் மையம் கொண்டதே பாடலை போட்டு எடிட் செய்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார். ஷிவானியின் அந்த கவர்ச்சி டான்ஸை பார்த்து எக்குத்தப்பான கமெண்ட்டுகளும், ட்ரோல்களும் குவிந்து வருகின்றன.
கழுவி ஊற்றிய ரசிகர்கள்: அவன் அவன் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் இருக்குறான், உனக்கு சிச்சுவேஷன் சாங் கேட்குதா என்றும், புயல் காத்துல சும்மா டிசர்ட் பறக்குதே என்றும் நெட்வொர்க் கிடைக்காமல் ரெண்டு நாள் கழிச்சுத் தானே இந்த வீடியோவை அப்லோடு பண்ணீங்க என்றும் இந்த ரணகளத்திலும் குதூகலம் ரீல்ஸ் எல்லாம் கேட்குது உங்களுக்கு என ஏகப்பட்ட ட்ரோல் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. 39 லட்சம் ரசிகர்கள் ஷிவானி நாராயணின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











