அம்மியை இறக்கிய பிக்பாஸ்.. எங்க அந்த பக்கம் அர்ச்சனா மம்மியையே காணோம்.. ஷிவானி அரைச்ச அழகிருக்கே!

சென்னை: அம்மியில் எப்படி அரைக்க சொல்லுவ என அம்மியில் அரைப்பதை ரொம்பவே கீழ்த்தரமாக பேசிய அர்ச்சனாவுக்கு ஆப்பு வைக்கும் வகையில், பிக் பாஸ் வீட்டில் அம்மியும் இறக்கப்பட்டு இருக்கிறது.

அடிமைகளாக வாழும் நிஷா, ஷிவானி எல்லாம் நேற்றைய எபிசோடில் அம்மியை வைத்து வித விதமான துவையல், சட்னி எல்லாம் அரைத்து அசத்தினர்.

குட்டி கவுன் அணிந்து ஷிவானி செல்லக் குட்டி தொடை தெரிய அம்மியில் அரைக்கும் அழகை பார்த்த இளைஞர்கள் தங்களது தூக்கத்தையே தொலைத்திருப்பர்.

அம்மியில அரைக்க விடுவேன்

அம்மியில அரைக்க விடுவேன்

அர்ச்சனா அக்கா வீட்டின் தலைவர் ஆன பிறகு அவர் ஓவர் அதிகாரம் பண்ணுகிறார் என தூக்கத்தில் இருந்து எழுந்தவுடன் நினைத்த பாலாஜி, உடனே ஓவர் டெம்பர் ஆகி, நான் தலைவரான உடன் எல்லாரையும் அம்மி அரைக்க விடுறேன் பாருங்க என பேசியதை பெரிய சண்டை ஆக்கினார்கள் அர்ச்சனாவும், ரியோவும்.

அம்மியை இறக்கிய பிக் பாஸ்

அம்மியை இறக்கிய பிக் பாஸ்

பாலாஜி அர்ச்சனா டீமுக்கு அதிகாரத்தையும் கொடுத்து, பிக் பாஸ் வீட்டில் அம்மியையும் இறக்கி இருக்கிறார் நம்ம நாரதர் பிக் பாஸ். அர்ச்சனாவுக்கு மட்டும் அதிகாரம் கொடுக்காமலும், பாலாஜிக்கு அம்மாவாகவும் ஆக்காமல் இருந்திருந்தால், இந்நேரம் நிஷா அக்கா அரைத்துக் கொண்டிருந்த இடத்தில் கடுகடுத்த முகத்துடன் அர்ச்சனா அரைத்துக் கொண்டு இருப்பார்.

அம்மியின் பெருமை

அம்மியின் பெருமை

அடிமையாக இருக்கும் அறந்தாங்கி நிஷா, அம்மியில் அறைத்துக் கொண்டிருக்கும் போது, அது பற்றி பாலாஜி கேட்க, உடனே மிக்ஸியில் அரைத்தால் வாசமும் சுவையும் இருக்காது. அம்மியில் அரைத்தால் டேஸ்ட் நல்லா இருக்கும். அதுவும் நம்ம மனசுக்கு பிடிச்சவங்களுக்கு சமைக்கும் போது அம்மியில் அரைச்சு குழம்பு வச்ச அது தனி ருசி என எல்லாத்தையும் ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொண்டு பேசினார். டைட்டில் உங்களுக்குத்தான்.

அம்மி அரைத்த ஷிவானி

அம்மி அரைத்த ஷிவானி

நிஷா அக்கா அம்மி அரைத்த அழகை ரசித்துப் பார்த்த ஷிவானி நாராயணன், நிஷா அக்காவை நகர்த்தி விட்டு, தானும் அம்மியில் அரைத்து பழகிக் கொண்டார். குட்டி கவுன் அணிந்திருந்த நிலையில், தொடை தெரிய ஷிவானி அம்மி அரைத்த அழகை பார்த்து இளைஞர்கள் ரொம்பவே ரசித்தனர். அதன் பின்னர், ரம்யா உள்ளிட்டோரும் அம்மியில் கை வைத்தனர்.

அர்ச்சனா மம்மியை காணோம்

அர்ச்சனா மம்மியை காணோம்

அம்மி அரைப்பதில் தவறு ஏதும் இல்லை. அது ரொம்பவே ஹெல்தியான விஷயம் தான் முதல் ஆளாக அதை அரைத்துப் பார்த்தேன் என்று சம்யுக்தாவிடம் பேசினார் பாலாஜி. ஆனால், அம்மி பக்கம் அர்ச்சனா அக்காவையும், ரியோவையும் சுத்தமாகவே காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருக்கு, இதை வைத்து ஒரு பஞ்சாயத்து சீக்கிரமே இருக்கு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X