Don't Miss!
- Sports
ஓ இதுதான் காரணமா...?? பும்ராவிடம் கூறிய ஸ்பெஷல் கேப்டன்சி அட்வைஸ்.. டிராவிட் வெளிப்படை பேச்சு!
- Finance
'இந்த' துறையில் ரூ.30 கோடி-யா.. அசத்தும் ஈரோடு ஆர்த்தி..!
- Lifestyle
இந்த வயசுக்கு மேல ஆண்களுக்கு இதய நோய் மற்றும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு ரொம்ப அதிகமாம்.. ஜாக்கிரதை!
- Automobiles
உங்க போர்டிங் பாஸில் SSSS என இருந்தால் அவளோதான்... இதுதான் அதோட அர்த்தமா? இனி கவனமா இருக்கணும்!
- News
நாட்டிலேயே எளிமையான முதல்வர் ஸ்டாலின்.. ஏற்றத்தாழ்வே காட்ட மாட்டாரு - அமைச்சர் பி.மூர்த்தி புகழாரம்
- Technology
Samsung: கொஞ்ச காசு இப்போ கட்டுங்க, மிச்சம் 12 மாசம் கழிச்சு கொடுங்க.. ஸ்மார்ட்TV மீது சலுகை!
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
பிக் பாஸ் அல்டிமேட்ல ஷிவானி நாராயணனா? அவங்களே சொன்ன பதிலை பாருங்க!
சென்னை : பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த ஜனவரி 30ம் தேதி முதல் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் சிலர் வெளியேறியுள்ளனர்.
கமலும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நிலையில் தற்போது நடிகர் சிம்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
மக்கள்
முட்டாள்
கிடையாது...
சூடான
சிம்பு...
பிக்
பாஸ்
அல்டிமேட்டின்
வேற
லெவல்
ப்ரோமோ!

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி
விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 5 சீசன்களாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வந்தது. நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அளித்த ஆதரவை அடுத்து தற்போது பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் நேரலையில் ஒளிபரப்பாகி வருகிறது.

14 போட்டியாளர்கள்
கடந்த ஜனவரி 30ம் தேதி இந்த நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து 70 நாட்கள் நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. போட்டியில் முந்தைய சீசன்களில் பங்கேற்ற ரசிகர்களை கவர்ந்த 14 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் சுரேஷ் சக்ரவர்த்தி, சுஜா வருணி, அபிநய், ஷாரிக் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அடுத்தடுத்த விலகல்கள்
உலக நாயகன் கமல்ஹாசனும் சூட்டிங்கிற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை என்று கூறி பிக் பாஸ் சீசன் 6ல் சந்திக்கலாம் என்று கூறிவிட்டு நிகழ்ச்சியல் இருந்து விலகினார். இதையடுத்து தற்போது நடிகர் சிம்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தொடர்ந்து வனிதா விஜய்குமாரும் தனக்கு இந்த நிகழ்ச்சி மனஉளைச்சலை அளிப்பதாக கூறி விலகினார்.

பிக் பாஸ் அல்டிமேட்டில் ஷிவானி?
இந்நிலையில் வைல்ட் கார்ட் மூலம் சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் விஜய் டிவி காமெடியன் சதீஷ் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர். தொடர்ந்து வைல்ட் கார்ட் மூலம் நடிகை லாஸ்லியாவும் இந்த நிகழ்ச்சிக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து ஷிவானி நாராயணனும் நிகழ்ச்சியில் வரவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் அதுகுறித்த தகவலை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

ஷிவானி நாராயணன் விளக்கம்
பிக் பாஸ் அல்டிமேட்டில் நிகழ்ச்சி குறித்த ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த ஷிவானி, ஏராளமான படங்களில் கமிட் ஆகியுள்ளதால் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு செல்ல வாய்ப்புகள் குறைவு என்று தெரிவித்துள்ளார். தற்போது வடிவேலுவுடன் இணைந்து நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடிக்கவுள்ளார் ஷிவானி.

அடுத்தடுத்த படங்கள்
இதேபோல ஆர்ஜே பாலாஜி இயக்கி நடிக்கும் படத்திலும் ஷிவானி ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கவே விஜய் சேதுபதியின் 46வது படத்திலும் நடிக்கும் ஷிவானி விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார்.
-
அன்று திட்டு.. இன்று பாராட்டு.. அண்ணனுக்கு வாழ்த்து சொன்ன வனிதா.. சொந்தம் விட்டுபோகுமா என்ன?
-
என் உழைப்பை பார்த்து அஜித் தான் என்னை முதலில் இயக்குநராக ஏற்று கொண்டார்.. எஸ்.ஜே. சூர்யா நெகிழ்ச்சி!
-
விக்ரம்..வெளியானது பத்தல பத்தல..அட இதிலயும் இல்லை ஒன்றியத்தின் தப்பாலே..கரெக்டாய் கட் செய்த படக்குழு