ஆர்ஜே பாலாஜியுடன் இணையும் பப்ளி பொண்ணு... இந்த முறையும் அரசியல்தானா
சென்னை : நடிகர் ஆர்ஜே பாலாஜி சிறப்பான கதைக்களங்களில் நடித்து வருகிறார்.
Recommended Video
அவரது மூக்குத்தி அம்மன் படம் வெளியாகி அவருக்கு சிறப்பான விமர்சனங்களை பெற்றுத் தந்தது.
இந்நிலையில் தற்போது அவர் அடுத்ததாக நடிக்கவுள்ள படத்தில் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நடிகை இணையவுள்ளார்.

நடிகர் ஆர்ஜே பாலாஜி
நடிகர் ஆர்ஜே பாலாஜி பல்வேறு தளங்களில் சிறப்பாக விளங்குகிறார். சிறப்பான ஆர்ஜேவாக தன்னை நிரூபித்த இவர், தற்போது விளையாட்டு போட்டிகளிலும் விஜேவாக சிறப்பான தொகுப்பையும் விமர்சனத்தையும் அளித்து ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார்.

ஸ்பாட்டிபை மியூசிக் செயலி
ஸ்பாட்டிபை மியூசிக் செயலி மூலம் நாலணா முறுக்கு என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார். இந்த தளத்தை உலகெங்கிலும் 35 கோடி பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். இதில் சிறப்பான பல விஷயங்களை தொகுத்து வழங்கி வருகிறார் ஆர்ஜே பாலாஜி.

இயக்குநராக சிறப்பு
நடிகராக மட்டுமின்றி இயக்குநருமாக தன்னை நிரூபித்து வருகிறார். மூக்குத்தி அம்மன் படத்திற்கு பிறகு தனது அடுத்த படத்தை இயக்கி நடிக்கும் பணிகளை தற்போது துவக்கியுள்ளார். அதே படக்குழுவுடன் இணைந்து இந்தப் படத்தையும் இயக்கி வருகிறார். கடந்த இரண்டு படங்களில் அரசியலை சிறப்பாக இணைந்து ரசிகர்களை கவர்ந்த ஆர்ஜே பாலாஜி இந்த முறையும் அதையே கையிலெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் அடுத்த படத்தில் நடிப்பு
மூக்குத்தி அம்மன் படத்தை இணைந்து தயாரித்த சரவணனுடன் இந்தப் படத்தையும் தயாரிக்க உள்ளார். மேலும் அடுத்தடுத்த இயக்குநர்களிடம் கதை கேட்டு வருவதாகவும் விரைவில் தான் இணையவுள்ள படம் குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஷிவானி ஜோடி
இந்நிலையில் அவர் தற்போது இயக்கி நடிக்கவுள்ள படத்தின் நாயகி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் ஷிவானி நாராயணன். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

ஷிவானி குஷி பதிவு
மேலும் திறமையான இயக்குநரும் நடிகருமான ஆர்ஜே பாலாஜியுடன் இணைந்தது குறித்து தான் மிகவும் பெருமை கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











