பச்சை கலரு பனியன்.. பக்காவா இருக்கும் சிரிப்பு.. சன் டே அதுவுமா ஷிவானி அம்மா போட்ட போஸ்ட்!
சென்னை: பிக் பாஸ் வீட்டில் கொலு பொம்மையாக இருக்கும் ஷிவானி நாராயணனின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படம் ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.
Recommended Video
சின்னத்திரை நடிகையாக விஜய் டிவியில் கலக்கிக் கொண்டிருந்த ஷிவானி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலக்குகிறார்.
பாலாஜி முருகதாஸ் உடன் ஷிவானி செய்யும் ரொமான்ஸ் தான் இந்த சீசனில் லவ் டிராக்காக மாறி உள்ளது.

பச்சை கலரு பனியன்
பச்சை கலரு பனியன் போட்டுக்கிட்டு, பக்காவாக போஸ் கொடுத்துள்ள ஷிவானி நாராயணனின் இன்ஸ்டாகிராம் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வைரலாகி வருகிறது. கைகளை தூக்கி, அழகா சிரிக்கும் ஷிவானியின் போட்டோவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

கடமை உணர்ச்சி
அடடே! சன் டே ஆகிடுச்சு ஷிவானி ரசிகர்களுக்கு கவர்ச்சி ட்ரீட் கொடுக்க வேண்டும் என்கிற கடமை உணர்ச்சியில் ஷிவானி நாராயணனின் அம்மா, ஷிவானியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள இன்ஸ்டாகிராம் போஸ்ட்டை பார்த்த ரசிகர்கள் ஷிவானியின் அம்மாவுக்கு நன்றி கூறி வருகின்றனர்.

பாலாஜியுடன் ரொமான்ஸ்
பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்ட ஷிவானி நாராயணன் மூன்று வாரங்களாக அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்து விட்டு, இப்போ பாலாஜி முருகதாஸ் உடன் சேர்ந்து மரத்தை சுத்தி டூயட் பாடும் ஆசையெல்லாம் வளர்த்துக் கொண்டார். இந்த சீசன் பிக் பாஸில் இவங்க தான் லவ் ஜோடியே!

இன்னாம்மா புடிக்கிறாரு
பிரிஸ்மா சிறந்த ஃபேஷன் ஜோடி போட்டிக்காக ஷிவானி நாராயணனும், பாலாஜி முருகதாஸும் பண்ண ரிஹர்சலை புரமோவில் காட்டிய அளவுக்கு கூட மெயின் எபிசோடில் காட்ட வில்லை என ரசிகர்கள் டென்ஷன் ஆனாலும், ஷிவானியின் இடுப்பை புடிச்சு தூக்கி ஆடிய ஆட்டத்தை கண்டு ஏகப்பட்ட ஷிவானி ஆர்மியினர் காண்டானது நிச்சயம்.

விஜயதசமி ஸ்பெஷல்
போன வாரம் விஜயதசமி ஸ்பெஷலை முன்னிட்டு, ஷிவானி நாராயணனின் அம்மா அழகா சேலை கட்டி லக்ஷ்மி கரமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருந்தார். ஷிவானி தினமும் செய்த போட்டோ போடும் வேலையை ஷிவானி வெற்றி பெற விரும்பும் அவங்க அம்மா அவ்வப் போது பதிவிட்டு ஃபாலோயர்கள் குறையாமல் பார்த்துக் கொள்கிறார்.


Click it and Unblock the Notifications











