Shivani Narayanan: செல்லம் நான் இருக்கேன்டா.. ஷிவானி போட்ட வீடியோ..கிறங்கிப் போன ஃபேன்ஸ்!

சென்னை: சீரியல் மூலம் இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்த நடிகை ஷிவானி நாராயணன். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவருக்கும் பிடித்தமானவராக மாறினார். தினமும் நான்கு மணி ஆகிவிட்டால், இன்ஸ்டாகிராமில், விதவிதமான போட்டோவை ஷேர் செய்யும் இவர், பாவாடை தாவணியில் ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.

முன்பெல்லாம் சினிமாவில் நடிப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. ஒரு காட்சியில் நடிக்க வேண்டும் என்றாலும் அதற்கான போட்டோஷூட் செய்து அதை கையில் வைத்துக்கொண்டு கம்பெனி கம்பெனியாக சென்றால் தான் பட வாய்ப்பே வரும். அதுவும் கூட்டத்தில் ஒருத்தராக நிற்கும் படி வரும். ஆனால், அந்த நிலை மாறிவிட்டது. கையில் ஆளு ஆளுக்கு போனை வைத்துக்கொண்டு விதவிதமான போட்டோக்களை எடுத்து, அதை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். அதுவும், கையில் கொஞ்சம் காசு இருந்துவிட்டால் போதும், போட்டோஷூட் ,வீடியோ என எடுத்து பட வாய்ப்பை பெற்று வருகின்றனர்.

shivani narayanan instagram

ஷிவானி நாராயணன்: இன்ஸ்டாகிராமில் போட்டோ வெளியிட்டு பிரபலமானவர் தான் நடிகை ஷிவானி நாராயணன். இன்ஸ்டாகிராமில் நான்கு மில்லியன் பாலோவர்களை வைத்து இருக்கும் இவருக்கு சீரியல் வாய்ப்பை பெற்றுத்தந்ததே இன்ஸ்டாகிராம் தான். இவர் விஜய் டிவியில் பகல் நிலவு, சரவணன் மீனாட்சி போன்ற சீரியலில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார். இதைத்தொடர்ந்து விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சில சீரியல்களில் நடித்தார்.

வெள்ளித்திரையில்: அதன் மீண்டும் விஜய் டிவிக்கு வந்த ஷிவானி நாராயணன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சீரியலில் ஹோம்லியாக புடவையுடன் வலம் வந்த இவர், பிக் பாஸ் வீட்டில், பாலாஜி முருகதாசுடன் நெருங்கி பழகி வந்தார். இதனால், இருவரும் காதலிப்பதாக சொல்லப்பட்டது. இதையடுத்து,பிக் பாஸ் வீட்டுக்கு வந்த ஷிவானியின் அம்மா, பாலாஜி முருகதாஸ் பின்னாடி சுத்தத்தான் இந்த வீட்டுக்கு வந்தியா என லெப்ட் அண்ட் ரைட்டு வாங்கினார். இதையடுத்து, அம்மணி கதறிக்கதறி அழுதார். அந்த சீசனில் ஹைலைட் டாப்பிக்கே ஷிவானி தான்

பின் நிகழ்ச்சிக்கு பின் சின்னத்திரையில் முகம் காட்டாத ஷிவானி நாராயணன், லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மூன்றாது மனைவியாக நடித்திருந்தார். அதன் பின், வீட்ல விசேஷம், டிஎஸ்பி,நாய் சேகர் ரிட்டன்ஸ் ஆகிய படத்தில் சின்ன சின்ன ரோலில் நடித்த ஷிவானி, பம்பர் படத்தில் கதாநாயகியாக நடித்தார். வெள்ளித்திரையில் சின்ன ரோலில் நடித்தபோதும், பெரியதாக படவாய்ப்பு எதுவும் இல்லாததால், பட வாய்ப்பை பெற கொஞ்சம் தோற்றத்தை மாறி போட்டோக்களை வெளியிட்டார். ஆனால், அதுவும் வேலைக்கு ஆகவில்லை.

தற்போது, மீண்டும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வரும், கோட் படத்தில் விஜய்,த்ரிஷா ஆட்டம் பேட்ட மட்ட பாடலுக்கு அழகாக ஆட்டம் போட்டு இருந்தார். அந்த ஆட்டத்தைப் பார்த்த மயக்கத்தில் இருந்தே ரசிகர்கள் மீளாத நிலையில், தற்போது பாவாடை தாவணியில், சூரரைப்போற்று படத்தில் வரும் காட்டுப்பயலே கொஞ்சிப்போட என் ஒருவாட்டி பாடலுக்கு அழகாக ஆட்டம் போட்டுள்ளார். இந்த ஆட்டத்தைப் பார்த்த ஃபேன்ஸ், நான் கொஞ்சுறேன் செல்லம் என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.அந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X