வாரேவா.. கோலிவுட்டின் புது ஹீரோயின் ரெடி.. தீயாக பரவும் ஷிவானி நாராயணனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

சென்னை: பிக் பாஸ் புகழ் ஷிவானி நாராயணனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.

Recommended Video

அடுத்து சினிமா கதாநாயகி | BIGG BOSS SHIVANI EXCLUSIVE INTERVIEW | FILMIBEAT TAMIL

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு புதிதாக சீரியலில் நடிக்கப் போகிறாரா? அல்லது சினிமாவுக்குள் நுழைய போகிறாரா? என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில், கோலிவுட்டில் தான் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போவதாக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் நடிகை ஷிவானி.

சின்னத்திரையில் கலக்கி வந்த இவர், சீக்கிரமே வெள்ளித்திரையில் ரசிகர்களுக்கு காட்சி தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இனி குண்டூஸ் இல்லை

இனி குண்டூஸ் இல்லை

பிக் பாஸ் வீட்டில் ஷிவானி நாராயணனை பார்த்து குண்டு பெண் என பாலாஜி முருகதாஸ் ரொம்பவே கிண்டல் செய்திருந்தார். அது ஷிவானிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும் கடினமாக வொர்க்கவுட் செய்து செம ஃபிட்டாக மாறியுள்ளார் ஷிவானி.

சுரேஷ் ரெய்னாவுடன்

சுரேஷ் ரெய்னாவுடன்

கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு பேட்மிண்டன் சூப்பர் லீக் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதே நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பிக் பாஸ் ஷிவானி சுரேஷ் ரெய்னாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வேற லெவலில் வைரலானது.

செம தூக்கலாக

செம தூக்கலாக

சமீபத்தில் பிங்க் நிற சேலை அணிந்து சைடு போஸில் செம தூக்கலாக ஷிவானி நாராயணன் போஸ் கொடுத்து தனது ரசிகர்களை கிறங்கடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஷிவானி என்ன பண்ண போறாங்க என்கிற கேள்வியைத் தான் ரசிகர்கள் தொடர்ந்து வைத்து வருகின்றனர். சீக்கிரமே ரசிகர்கள் வாய் பிளந்து பார்க்கும் அளவுக்கு ஒரு அதிரடி அறிவிப்பை ஷிவானி வெளியிட உள்ளார்.

கோலிவுட்டின் புது ஹீரோயின்

கோலிவுட்டின் புது ஹீரோயின்

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை ஷிவானி நாராயணன் சினிமா படம் ஒன்றில் கமிட் ஆகப் போவதாகவும், அந்த படம் தொடர்பான வேறு எந்த அறிவிப்பையும் தற்போது சொல்ல முடியாது என்றும் கூறியிருந்தார். ரைசா வில்சன், லாஸ்லியா, ரம்யா பாண்டியனை தொடர்ந்து இன்னொரு புது ஹீரோயினும் கோலிவுட்டுக்கு பிக் பாஸ் மூலம் கிடைக்க போகிறார்.

சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே

சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே

இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒயிட் அண்ட் பிங்க் கலந்த சுடிதார் அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ள ஷிவானி நாராயணனை பார்த்து அவரது ரசிகர்கள் ஆச்சர்யத்தில் அசந்து போயுள்ளனர். ரொம்ப அழகா இருக்கீங்க இந்த காஸ்ட்யூம்ல என்றும், சீக்கிரமே ஹீரோயின் ஆகிடுங்க என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஷிவானிக்கு விருது

ஷிவானிக்கு விருது

இந்தியன் மீடியா வொர்க்ஸ் சார்பாக Applaudable Talent 2021 விருது வழங்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து இந்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பிக் பாஸ் புகழ் ஷிவானி நாராயணன். அதற்காகவும் அவரது ரசிகர்கள் ஷிவானியை வாழ்த்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X