Don't Miss!
- News
ப.சிதம்பரம் திகார் சிறைக்கு செல்ல வாய்ப்பு! கார்த்தி சிதம்பரத்திற்கு ஆபத்தில்லை..! ஹெச்.ராஜா அதிரடி!
- Sports
ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை.. ராகுல் திரிபாதி மரண பேட்டிங்.. ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய மும்பை
- Finance
இந்தியாவை விட இலங்கை, பாகிஸ்தான், வங்க தேசத்தில் பெட்ரோல் விலை குறைவு.. ஆய்வறிக்கை வெளியீடு!
- Automobiles
இதை யாரும் எதிர்பாக்கவே இல்ல... ஹூண்டாய் நிறுவனத்தை பாக்கவே பாவமா இருக்கு... என்ன ஆச்சு தெரியுமா?
- Technology
ரூ.20,000 விலைப்பிரிவு: அறிமுகமான ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு- 12 ஜிபி ரேம், 67வாட்ஸ் சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜிங்
- Lifestyle
மேங்கோ கிரனிட்டா
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆரம்பமே ஷிவானி நாராயணனுக்கு செம ’பம்பர்’ தான் போல.. 8 தோட்டாக்கள் பட ஹீரோவுடன் ஜோடி சேர்ந்துட்டாரு!
சென்னை: வேதா பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் செல்வக்குமார் இயக்கும் 'பம்பர்' படத்தில் நடிகர் வெற்றிக்கு ஜோடியாக ஷிவானி நாராயணன் நடிக்கிறார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்ட ஷிவானி நாராயணனுக்கு ஏகப்பட்ட சினிமா பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி உடன் இணைந்து நடித்து வரும் ஷிவானி ஹீரோயினாக நடிக்கும் அடுத்த படம் குறித்த அசத்தல் அப்டேட் வெளியாகி உள்ளது.

சினிமாவில் ஷிவானி
சின்னத்திரை நடிகையான ஷிவானி நாராயணன் பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்ட நிலையில் சினிமாவில் அவருக்கு பிரகாசமான வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி, அனு க்ரீத்தி வாஸ் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் போலீஸ் அதிகாரியாக ஷிவானி நாராயணன் நடித்து வரும் நிலையில், ஹீரோயினாக 'பம்பர்' எனும் படத்தில் கமீட் ஆகி உள்ளார் ஷிவானி.

படம் பெயரே பம்பர்
கேரள மாநிலத்தில் புழங்கும் லாட்டரியை மையமாகக் கொண்ட 'பம்பர்' என்ற தமிழ் திரைப்படத்தில் '8 தோட்டாக்கள்' மற்றும் 'ஜீவி' புகழ் வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார். வேதா பிக்சர்ஸ் பேனரில் சு. தியாகராஜா தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர்கள் மீரா கதிரவன் மற்றும் 'கொம்பன்' முத்தையா உள்ளிட்டவர்களிடம் பணியாற்றிய அனுபவமுள்ள எம். செல்வக்குமார் இயக்குகிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்க கார்த்திக் நேத்தா பாடல்களை இயற்றுகிறார்.

சபரிமலையில் ஷூட்டிங்
இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு எருமேலியில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பெருவழிப்பாதை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கேரள அரசின் உரிய அனுமதியுடன் நிறைவடைந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கி பிப்ரவரி மாதம் நிறைவடையும். சில முக்கிய காட்சிகள் தூத்துக்குடியில் படமாக்கப்படவுள்ளன. இப்படத்தின் கதாநாயகியாக 'பிக் பாஸ்' புகழ் ஷிவானி நாராயணன் நடிக்கிறார். சுவாரசியமான கதாபாத்திரம் ஒன்றை தங்கதுரை ஏற்றுள்ளார்.

பம்பர் லாட்டரி கதை
படத்தை பற்றி பேசிய இயக்குநர் செல்வக்குமார், "கேரள பம்பர் லாட்டரி தான் இப்படத்தின் கதைக்களமாகும். வெற்றி கதாநாயகனாகவும், அதற்கு இணையான கதாபாத்திரத்தில் நடிகர் ஹரீஷ் பேரடியும் நடிக்கின்றனர்," என்றார். படத்தின் ஒளிப்பதிவை நெடுநல்வாடை, எம்ஜிஆர் மகன், ஆலம்பனா மற்றும் கடமையை செய் ஆகிய திரைப்படங்களின் ஒளிப்பதிவாளர் வினோத் ரத்தினசாமி கையாள்கிறார். படத்தொகுப்புக்கு மு.காசிவிஸ்வநாதன் பொறுப்பேற்றுள்ளார்.

8 தோட்டாக்கள் ஹீரோ
'8 தோட்டாக்கள்'மற்றும் ஜிவி படங்களின் மூலம் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த நடிகர் வெற்றி இந்த பம்பர் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நடிகை ஷிவானி நாராயணன் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.