கழுதை குடிசையா இருந்தாலும் பரவாயில்லை.. என்ன கடைசியில ஷிவானி இப்படி மாறிட்டாரே.. பசி தான் காரணம்!
சென்னை: பிக் பாஸ் ஷிவானி நாராயணன் சமீப காலமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு ஆக்டிவாக மாறியுள்ள நிலையில், தற்போது தேங்காய் ஒன்றை கடித்துத் திங்கும் வீடியோ அதிகம் பரவி வருகிறது.
மேலும், ஓணம் பண்டிகையை கொண்டாடும் விதமாக கேரளா சேலையை அணிந்து கொண்டும் அழகு ரதி அக்னிகோத்ரியாக மாறி ரசிகர்களை வசீகரித்து வருகிறார் ஷிவானி நாராயணன்.

பம்பர் படத்துக்கு பிறகு நடிகை ஷிவானிக்கு அடுத்த பட வாய்ப்பு அமையவில்லையா? இப்படி இன்ஸ்டாகிராமில் அதிக நேரத்தை செலவிட்டு வருகிறாரே என்றும் நெட்டிசன்களும் ஒரு பக்கம் கலாய்த்து வருகின்றனர்.
தேங்காய் திண்ணும் தேவதை: ஒயிட் கலர் டாப்ஸ், குட்டித் தொப்பை தெரிய குட்டி ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு உணவு ரெடியாக நேரமான நிலையில், கொல பசிக்கு உடனடியாக தேங்காய் தான் கிடைத்தது என அரைமூடி தேங்காயை அப்படியே கடித்துத் தின்னும் ஷிவானி நாராயணனின் லேட்டஸ்ட் வீடியோ இன்ஸ்டாகிராமில் லைக்குகளை குவித்து வருகின்றன.
ஓணம் வந்தல்லோ: ஆகஸ்ட் 20 முதல் ஆகஸ்ட் 31ம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், ஓணம் திருநாளை வரவேற்கும் விதமாக நடிகை ஷிவானி நாராயணன் கேரளா சேலையை அணிந்துக் கொண்டு கையில் தாமரை மலரை வைத்துக் கொண்டு அழகு தேவதையாக காட்சியளித்த போட்டோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இளைஞர்களை இம்சைப்படுத்தி வருகிறார்.

பேக் போஸே பிரம்மாதமா இருக்கே: கையில் பூஜை கூடையுடன் பிங்க் நிற ஜாக்கெட் அணிந்துக் கொண்டு பேக் போஸை காட்டி அவர் நடந்து செல்லும் அழகே தனி அழகு என ஷிவானி நாராயணனை அவரது ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.
மேக்கப் கொஞ்சம் தூக்கலா இருக்கு என்றும் சினிமா வாய்ப்பு கிடைக்கலைன்னா உடனே போட்டோகிராஃபரை கூட்டிக்கிட்டு போட்டோஷூட் நடத்த கிளம்பிடுவீங்களே என சில நெட்டிசன்கள் பங்கமாக ஷிவானி நாராயணனை ட்ரோல் செய்து கலாய்த்து வருகின்றனர். வித விதமாக போஸ் கொடுத்து எப்படியாவது இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களை 4 மில்லியன் ஃபாலோயர்களாக மாற்ற தீவிர முயற்சி செய்து வருகிறார் ஷிவானி என்றும் கமெண்ட்டுகள் குவிகின்றன.



Click it and Unblock the Notifications











