பச்சைக்கிளி பச்சையம்மா.. ஆட்டோக்காரி.. சுக்குக்காபி விற்கும் பெண்.. இறங்கி கேம் ஆடும் ஷிவானி!
சென்னை: பாலாஜி முருகதாஸ் கூட சேராமல் இருக்கும் ஷிவானி நாராயணன், இப்போ தான் தனது தனித்துவத்தை கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்தி வருகிறார்.
மணிக்கூண்டு கிளி, ஆட்டோக்காரி, சுக்குக்காபி விற்கும் பெண் என நேற்றைய எபிசோட் முழுவதும், ஷிவானி தரிசனமாகவே இருந்தது மட்டுமே ரசிகர்களுக்கு கொஞ்சம் ஆறுதல்.
முதல் நாள் மணிக்கூண்டு டாஸ்க்கிலும் நிஷாவுடன் சரிக்கு சமமாக சண்டை போட்டு தன்னோட கெத்தை காட்டி இருந்தார்.

டீம் சேஞ்ச்
மணிக்கூண்டு டாஸ்க்கில் பாலாவின் ஒரு தலை காதலிகளான சனம் ஷெட்டி மற்றும் சுசித்ராவை கோர்த்து விட்ட பிக் பாஸ், ஷிவானியை வேற டீமில் சேர்ந்து விட்டு புண்ணியம் கட்டிக் கொண்டார். டீம் மாறியதும் ஷிவானி தனது ஸ்பெஷல் பர்ஃபார்ம்களை ஒன்றன் பின் ஒன்றாக வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார்.

நிஷாவுடன் சண்டை
மணிக்கூண்டு டாஸ்க்கின் முதல் நாள் எபிசோடில் அர்ச்சனாவையும் அனிதாவையும் அலற விட்ட நிஷாவையே கதற விட்டார் நம்ம ஷிவானி நாராயணன். பாக்கத்தான் கிளாஸ் இறங்கினேன் பக்கா லோக்கல் என்பது போல நிஷாவுடன் சண்டை போட்டதும், ரமேஷ் கொடுத்த டிப்ஸுக்கு பிறகு, நிஷாவை கிச்சு கிச்சு மூட்டி சிரிக்க வைத்ததும் என ஷிவானி கலக்கினார்.

பச்சைக் கிளி பச்சையம்மா
நிஷா, ரியோ ராஜ், சோம், கேபி, ரம்யா பாண்டியன், ஆரி மற்றும் பாலாஜி என ஏகப்பட்ட ஹவுஸ்மேட்கள் மணிக்கூண்டு கிளியாக வேஷம் போட்டு பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு நேரத்தையும் அடுத்து என்ன டாஸ்க் செய்ய வேண்டும் என்பதையும் சொல்லி வந்தனர். ஆனால், பச்சைக் கிளி பச்சையம்மாவாக அந்த லுக்கில் கவர்ந்து இழுத்தது என்னவோ ஷிவானி செல்லம் தான்.

ஆட்டோக்காரி
அசிங்கப்பட்டாள் இன்ஸ்டாகாரி என கலாய்க்கப்பட்ட ஷிவானி நாராயணன், பாட்ஷா ரஜினி மாதிரி ரியோ ராஜ், அர்ச்சனாவை எல்லாம் வைத்துக் கொண்டு பிக்பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்ட ஆட்டோவை தனது கால்களாலே ஓட்டிக் கொண்டு சென்ற காட்சியெல்லாம் ரசிகர்களுக்கு வேற லெவல் விருந்து என்றே சொல்லலாம்.

ஷிவானியின் சுக்குக்காபி
முதல் நாள் டீ வந்த நிலையில், அடுத்த நாள் சுக்குக் காபி வந்தது. பாலாஜி முருகதாஸ் டீ விற்ற நிலையில், ஷிவானி சுக்குக் காபி விற்றார். யாருமே அவருடைய சுக்குக்காபியை விரும்பி குடிக்கவில்லை என்றும் ரொம்பவே ஃபீல் பண்ணி சொல்லும் போது, எங்களுக்கு கொடுங்க நாங்க குடிக்கிறோம் என சில ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஜொள்ளு விட்டது செம காமெடி.

இப்படியே இருங்க
அந்த பாலாஜி பையன் கூட சேராதீங்க, உங்களை நல்லா யூஸ் பண்ணிட்டு, அப்படியே கழட்டி விட்டுடுறான். அவன் உங்களை உண்மையா லவ் பண்ணல, அவனுக்காக டைம் வேஸ்ட் பண்ணாதீங்க, இப்படியே இருங்க, வித விதமாக டாஸ்க் பண்ணி கலக்குங்க, என ஏகப்பட்ட ஷிவானி ஆர்மியினர் ஷிவானிக்கு அட்வைஸ் சொல்லி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











