ஆத்தா நான் ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கிட்டேன்.. சின்னக் குழந்தையாக மாறிய ஷிவானி நாராயணன்.. செம வீடியோ!
சென்னை: பிக் பாஸ் பிரபலமும் கோலிவுட்டின் யங் நடிகையுமான ஷிவானி நாராயணன் ஷாப்பிங் மாலில் உள்ள பிளே ஏரியாவில் சின்னக் குழந்தையை போல விளையாடும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.
மாடி போட்டோஷூட், பீச்சில் ஜாலி பண்ணுவது, டேஷிங் கார் ஓட்டுவது என ஹாலிடேவை கொண்டாடி வருகிறார் ஷிவானி நாராயணன்.

கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான ஷிவானி நாராயணன் சமீபத்தில் அவர் நடித்து வெளியான பம்பர் படத்துக்கு கிடைத்த வரவேற்பால் செம ஹேப்பியாகி உள்ளார்.
பீச் பேபி: நடிகை ஷிவானி நாராயணன் மாமன்னன் படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான "நெஞ்சமே நெஞ்சமே" பாடலுடன் இணைத்து பீச்சில் என்ஜாய் பண்ணும் வீடியோவை சமீபத்தில் வெளியிட்டு தனது இன்ஸ்டாகிராம் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி இருந்தார். பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாகி உள்ள ஷிவானி தொடர்ந்து இன்ஸ்டா போஸ்ட்டுகளை பதிவிட்டு வருகிறார்.
ஸ்டார் ஹோட்டலில் ஷிவானி: சினிமா ஷூட்டிங் இல்லாத நிலையில், தனது அம்மாவுடன் சென்னையில் உள்ள ரெசிடன்ஸி டவர்ஸ் ஹோட்டலில் டின்னர் சாப்பிட்ட போட்டோக்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு லைக்குகளை குவித்துள்ளார் ஷிவானி நாராயணன். பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்ட ஷிவானி பாலாஜி முருகதாஸ் உடன் நெருக்கமாக பழகி வந்த நிலையில், தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டு பிறந்தநாளுக்கும் பாலாஜி முருகதாஸ் ஷிவானியின் பிறந்தநாள் பார்ட்டியில் பங்கேற்று வருகிறார். இருவரும் இணைந்து நடிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

டேஷிங் கார் விளையாட்டு: சென்னையில் உள்ள பிரபல மாலில் சின்னக் குழந்தையை போல நடிகை ஷிவானி நாராயணன் விளையாடிய வீடியோவையும் லேட்டஸ்ட்டாக ஷேர் செய்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். என் இதயத்தில் எப்போதுமே சந்தோஷமான குழந்தையாகவே நான் இருக்கிறேன் என்றும் அதற்கு கேப்ஷன் கொடுத்திருக்கிறார் ஷிவானி நாராயணன்.
ஆத்தா நான் ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கிட்டேன்: மேலும், குதிரை ஓட்டும் ரேஸ் வீடியோ கேமை விளையாடி ஃபர்ஸ்ட் பிளேஸில் வெற்றியடைந்த காட்சிகளை வெளியிட்டு "ஆத்தா நான் ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கிட்டேன்" என செம ஜாலியாக கேப்ஷன் போட்டிருக்கிறார் ஷிவானி நாராயண. இப்படியே எப்போதும் சிரித்துக் கொண்டு ஹேப்பியா இருக்கணும் ஷிவானி என அவரது ரசிகர்கள் கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர். அடுத்த படத்தின் அப்டேட்டை கொஞ்சம் சொல்லுங்க ஷிவானி என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











