என்ஜாய் எஞ்சாமியை மிஞ்சும்...சிங்கிள் வீடியோ பாடலில் பிக்பாஸ் ஷிவானி

சென்னை : சமீப காலமாக சிங்கிள் வீடியோ பாடல் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஏராளமான இசையமைப்பாளர்கள் கிடைத்து வருகின்றனர். இந்த சிங்கிள் வீடியோ பாடல்கள் பிரம்மாண்டமாக ஹிட் ஆவதால் பிரபல நடிகர், நடிகைகள் பலரும் இந்த பாடல்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Recommended Video

ENJOY ENJAAMI பாடலுக்கு பிரபலங்கள் ஆட்டம் | Losliya, AlyaManasa, Janani

இதற்கு முன் குக் வித் கோமாளி போட்டியாளர் அஸ்வின் நடித்த, குட்டி பட்டாஸ் சிங்கிள் வீடியோ பாடல் தாறுமாறாக ஹிட் அடித்தது. இதனால் சிங்கிள் வீடியோ பாடல்கள் அதிகம் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த பாடல்கள் பெரிய அளவில் இளைஞர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. சமூக வலைதளங்களிலும் வரவேற்பை பெறுகின்றன.

சிங்கிள் பாடலில் ஷிவானி

சிங்கிள் பாடலில் ஷிவானி

அந்த வரிசையில் லேட்டஸ்டாக சிங்கிள் வீடியோ பாடலில் பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளாக பங்கேற்று புகழடைந்த ஷிவானி நாராயணன் நடிக்க உள்ளார். ரொமான்டிக் பாடலான இதில் பூரனேஷ் நடிக்கிறார். இதனை பேச்சுலர் படத்தை இயக்கிய சதீஷ் செல்வகுமார் இயக்குகிறார்.

போதையில் ஆடாதே

போதையில் ஆடாதே

போதையில் ஆடாதே என பெயரிடப்பட்டுள்ள இந்த சிங்கிள் வீடியோ பாடலுக்கு அருண் ராஜ் இசையமைக்கிறார். இவர் இதற்கு முன் தடம் படத்தில் இசையமைக்கிறார். இந்த ஆல்பம் பற்றி சதீஷ் கூறுகையில், இது என்ஜாய் எஞ்சாமி படலை போன்று இருக்கும். டைரக்டர்கள் கவுதம் மேனன் போன்ற பலரும் தமிழில் இது போல் நிறைய வீடியோ பாடல்களை எடுத்துள்ளனர்.

4 நிமிட காதல் கதை

4 நிமிட காதல் கதை

தற்போது ஆக்கத்திற்காக நிறைய சுதந்திரம் கிடைத்துள்ளதால் இது போன்று பணியாற்றுவதற்கு இது சரியான நேரம். போதையில் பாடல் பிரிந்து மீண்டும் இணையும் காதல் பயணத்தை சொல்கிறது. இந்த 4 நிமிட பாடலுக்காக ஒரு சிறிய கதையை உருவாக்கி உள்ளோம்.

வித்தியாசமான அனுபவம்

வித்தியாசமான அனுபவம்

பூரனேஷ், புதுமுக நடிகர். தற்போது 2 படங்களில் நடித்து வருகிறார். இது அவரது பயணத்தில் ஓரு நல்ல அடித்தளமாக இருக்கும். மேலும் ஷிவானி, இன்று புகழ்பெற்ற நடிகையாகி விட்டார். டிவி சீரியல்களில் நடித்துள்ளார். ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றுள்ளார். ரொமான்ஸ், எமோஷன், டான்ஸ் கலந்ததாக இந்த பாடல் இருக்கும். இது வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும்.

கவனத்தை ஈர்க்கும் பாடல்

கவனத்தை ஈர்க்கும் பாடல்

படத்தின் பாடல்களை விட ஆல்பம் பாடல் வித்தியாசமானது. 4 நிமிடத்தில் ஒரு கதையை சொல்லி, பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும். அருண் இணையில் அழகிய பாடலாக இது அமைய உள்ளது. புகழ்பெற்ற பாடல் இந்த பாடலை பாடி உள்ளார் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X