Don't Miss!
- Automobiles
உல்லாச கப்பலில் எல்லாத்தையும் அனுபவிக்க இப்படி ஒரு வழி இருக்கா? இதை எல்லாம் இப்பவே தெரிஞ்சு வெச்சுக்கணும்!
- News
உதய்பூர் கொலையாளிகளுக்கு அடி, உதை.. "சட்டையை" கிழித்து சட்டத்தை கையில் எடுத்த வழக்கறிஞர்கள்
- Finance
உங்கள் வாகனம் தொலைந்துவிட்டதா? சாவி இல்லையென்றால் இன்சூரன்ஸ் பணம் கிடைக்காது தெரியுமா?
- Sports
அன்று யுவ்ராஜ் சிங், இன்று பும்ரா.. டெஸ்ட் கிரிக்கெட்டில் உலக சாதனை.. அதுவும் பிராட் பவுலிங்கில்..
- Lifestyle
தினமும் இந்த ஒரு பொருளை உணவில் சேர்த்துக் கொள்வது உங்களுக்கு புற்றுநோய் வராமல் தடுக்குமாம் தெரியுமா?
- Technology
Samsung: கொஞ்ச காசு இப்போ கட்டுங்க, மிச்சம் 12 மாசம் கழிச்சு கொடுங்க.. ஸ்மார்ட்TV மீது சலுகை!
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் வடிவேலுவுக்கு ஜோடி யார் தெரியுமா? தொடர்ந்து பம்பர் தான் போல!
சென்னை: நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் வடிவேலுவுடன் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்றும் ஹாலிவுட் நடிகை நடிக்கப் போகிறார் என்றும் ஏகப்பட்ட தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், வடிவேலுவுடன் இணைந்து நடிக்கப் போவது யார் என்கிற அட்டகாசமான அறிவிப்பை அந்த நடிகையே தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போனதும் தான் போனார் இப்படி தொடர்ந்து அவருக்கு பம்பர் அடித்து வருகிறதே என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.
அந்த
கேரக்டரில்
நடிக்க
தாம்ப்பா
ஆசை...அதிர
வைத்த
சத்யராஜ்

ஹீரோயின் வேட்டை
நடிகர் வடிவேலு நடிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்ட நிலையில் லைகா தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார்? என்கிற கேள்வி எழுந்த நிலையில், ஏகப்பட்ட முன்னணி நடிகைகளின் பெயர்கள் அடிபட்டன.

கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக
நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் வடிவேலுவுக்கு ஜோடி இல்லை என்றும் முக்கியமான பெண் கதாபாத்திரம் படத்தில் இருப்பதாகவும் நடிகை கீர்த்தி சுரேஷ் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும் பேச்சுக்கள் கிளம்பின. ஆனால், அந்த பேச்சுக்கள் அப்படியே வதந்தியாக மாறிவிட்டன. அதன் பிறகு வெளிநாட்டு நடிகை ஒருவரை நடிக்க வைப்பதாக பேச்சுக்கள் அடிபட்டன.

ஷிவானி தான் ஜோடியாம்
இப்படி ஏகப்பட்ட நடிகைகள் பெயர் அடிபட்டு வந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களின் மனங்களை கவர்ந்த இன்ஸ்டாகிராம் இளவரசி ஷிவானி நாராயணன் தான் தற்போது நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக அவரே வடிவேலுவுடன் இணைந்திருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு அறிவித்துள்ளார்.

ஒரே பம்பர் தான் போல
நடிகர் வெற்றியுடன் பம்பர், விஜய்சேதுபதியுடன் பொன்ராம் படம், ஆர்ஜே பாலாஜியுடன் ஒரு படம் என 3 படங்களில் நடித்து வரும் நடிகை ஷிவானி நாராயணன் நாய்சேகர் படத்தில் வடிவேலுவுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி உள்ள பிக் பாஸ் பிரபலத்துக்கு ஒரே பம்பர் தான் போல என ஷிவானி ரசிகர்கள் கமெண்ட் போட்டு வாழ்த்தி வருகின்றனர்.

கலக்குங்க
வடிவேலுவுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து இந்த சூப்பரான செய்தியை நடிகை ஷிவானி சொன்ன நிலையில், எங்க தலைவனோட நடிக்க கொடுத்து வச்சிருக்கணும் என்றும் கலக்குங்க ஷிவானி என்றும் ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. அடுத்த இரண்டு வருடங்களில் கோலிவுட்டின் யங் குயினாக மாறிவிடுவார் போல ஷிவானி.