பிகினியில் ரசிகர்களை திக்குமுக்காட செய்த ஷிவானி...லைக்குகளை அள்ளும் போட்டோ
சென்னை : சின்னத்திரை நடிகையான ஷிவானி நாராயணன் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமடைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவான ஷிவானி, தொடர்ந்து தனது கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு, ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

அவ்வப்போது நடன வீடியோக்களையும் வெளியிட்டு, பரபரப்பை கூட்டி வருகிறார். பிக்பாஸ் வீட்டிற்குள் பாலாஜிக்கும், இவருக்கும் காதல் ஏற்பட்டதாக கிசுகிசுக்கப்பட்டது. இதை உண்மை என்பதை போல் அடிக்கடி பார்ட்டிகளில் பாலாஜியுடன் இருக்கும் போட்டோவையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
பட வாய்ப்புகளுக்காக முன்னழகு, பின்னழகை காட்டி கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி வரும் ஷிவானி, தற்போது விடுமுறையை உல்லாசமாக கழிக்க மாலத்தீவு சென்றுள்ளார். சமீப காலமாக பிரபலங்கள் பலரும் மாலத்தீவு சென்ற போட்டோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வரிசையில் ஷிவானியும், மாலத்தீவில் பீச் ரிசார்ட் ஒன்றில் பிகினியில் நீச்சல் குளத்தில் இருக்கும் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த போட்டோவிற்கு ஷிவானியின் ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
இந்த போட்டோவை ஷிவானி பகிர்ந்த 15 நிமிடங்களில் 25,000 க்கும் அதிகமானவர்கள் லைவ் செய்துள்ளனர். இந்த போட்டோவிற்கு சூப்பர், வேற லெவல், தலைவி என்றே அதிகமானவர்கள் கமென்ட் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











