கடற்கரையில் கட்டிப்பிடித்து முத்தம்.. ஷிவானி நாராயணனுக்கு எப்பவுமே பெஸ்ட் பிரண்ட் இவங்க தானாம்!

சென்னை: அன்னையர் தினத்துக்குத் தான் அம்மாவோட போட்டோ போடணும்னு இல்லை. நண்பர்கள் தினத்துக்கும் அம்மாவோட போட்டோ போடலாம் என அசத்தி உள்ளார் ஷிவானி நாராயணன்.

சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்த ஷிவானி நாராயணன் பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டார்.

2 மில்லியன் ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்தும் ஷிவானி நாராயணன் டைட்டிலை வெல்ல முடியாமல் போனதற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஸ்க்ரிப்ட் தான் காரணம் என்கின்றனர்.

இளம் போட்டியாளர்

இளம் போட்டியாளர்

வெறும் 19 வயது வயதில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம் போட்டியாளர் என்கிற பெருமைக்குரியவர் ஷிவானி நாராயணன். கேபி, ஆஜித் எல்லாம் இவரை விட கொஞ்சம் வயது அதிகமானவர்கள் தானாம். நிகழ்ச்சிக்கு உள்ளே நுழைவதற்கு முன்னமே 20 லட்சம் ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் கொண்டிருந்தார் ஷிவானி நாராயணன்.

காதல் ஸ்க்ரிப்ட்

காதல் ஸ்க்ரிப்ட்

கடந்த பிக் பாஸ் சீசனில் ஏகப்பட்ட கல்யாணமானவர்களை களமிறக்கியதால் காதல் ஸ்க்ரிப்ட்டுக்கு கச்சிதமாக பொருந்தியது ஷிவானி நாராயணனும் பாலாஜி முருகதாஸும் தான். நடிகை ரம்யா பாண்டியன் பெரிதாக அந்த வலையில் சிக்காத நிலையில் பாலா மாமா பாலா மாமா என மாட்டிக் கொண்டு அவரை ரன்னர் அப் ஆக்கி ஷிவானி வெளியேறிவிட்டார்.

தினமும் தவறாமல்

தினமும் தவறாமல்

சின்னத்திரை நடிகையாக கலக்கி வந்த ஷிவானி நாராயணன் தினமும் தவறாமல் படு கவர்ச்சியான போட்டோஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை 4 மணி அல்லது 5 மணி என டைம் பார்த்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுத் தான் அந்த 2 மில்லியன் ரசிகர்களையும் சேர்த்தார்.

3 மில்லியன்

3 மில்லியன்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை ஷிவானி நாராயணின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் இணைந்து வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலக்கி வரும் ஷிவானிக்கு தற்போது 2.9 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர். கூடிய விரைவில் 3 மில்லியனை தாண்டி விடுவார்.

விஜய்சேதுபதியுடன் போட்டோ

விஜய்சேதுபதியுடன் போட்டோ

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பிக் பாஸ் ஜோடிகள் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷிவானி நாராயணன் சமீபத்தில் நடிகர் விஜய்சேதுபதி உடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வேற லெவலில் வைரலானது. அதற்கு முன்னதாக ரெய்னாவுடன் புகைப்படம் எடுத்தும் இவர் வைரலாக்கினார்.

பிரண்ட்ஷிப் டே

பிரண்ட்ஷிப் டே

இந்நிலையில், பிரண்ட்ஷிப் டேவை முன்னிட்டு நடிகை ஷிவானி நாராயணன் கடற்கரையில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை ஷேர் செய்து வைரலாக்கி உள்ளார். அன்னையர் தினத்துக்கு மட்டுமின்றி நண்பர்கள் தினத்துக்கும் அம்மா உடன் தான் போட்டோ போடுவேன் என்பதில் உறுதியாக ஷிவானி இருப்பது இந்த போட்டோக்கள் மூலம் தெளிவாகிறது.

கட்டிப்பிடித்து முத்தம்

கட்டிப்பிடித்து முத்தம்

அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.. அம்மா நீ தான் என் உலகம் என ஷிவானி நாராயணன் தனது அம்மாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் புகைப்படங்களை ஷேர் செய்து சென்ட்டிமென்ட்டில் டச் செய்து லைக்குகளை குவித்து வருகிறார். பிக் பாஸ் பிரபலம் ஆஜித் காலிக் மற்றும் ஷிவானியின் ரசிகர்கள் இந்த பிரண்ட்ஷிப் டே போட்டோக்களுக்கு லைக் செய்து வருகின்றனர்.

அசிங்கப்படுத்திய அம்மா

அசிங்கப்படுத்திய அம்மா

ஆனால், பிக் பாஸ் வீட்டிற்குள் ஷிவானி நாராயணன் இருக்கும் போது அவரை பார்க்க வந்த இதே அம்மா தான் அவரை பப்ளிக்காக பாலாஜிக்கு ஆயா வேலை செய்யவா உள்ளே வந்த எனக் கூறி அசிங்கப்படுத்தினார் என கமெண்ட்டுகளில் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். பிக் பாஸ் ஷோவின் ருசிகர ஸ்க்ரிப்பிட்டில் ஓவர் பர்ஃபார்மன்ஸ் பண்ணியதால் வந்த வினை இதெல்லாம் என்றும் சிலர் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

சீக்கிரமே சினிமா

சீக்கிரமே சினிமா

பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்ட ரம்யா பாண்டியன், சம்யுக்தா உள்ளிட்டோருக்கு சினிமா வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில், ஷிவானி நாராயணுக்கு இன்னமும் அப்படியொரு வாய்ப்பு அமையவில்லை. ஆனால், சீக்கிரமே சினிமாவில் ஒரு சூப்பரான என்ட்ரி கொடுக்க ஏகப்பட்ட முயற்சிகளை அவர் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X