கருப்பு சேலையில்.. கவர்ச்சி சிலையாக கவர்ந்திழுக்கும் ஷிவானி.. வேற லெவலில் வைரலாகும் இன்ஸ்டா போட்டோ!
சென்னை: பிக் பாஸ் வீட்டில் அட்மாஸ்பியர் பட்டம் வென்ற ஷிவானி, இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட ரசிகர்களின் அட்டென்டன்ஸை பெற்று வருகிறார்.
பிக் பாஸ் வீட்டில் நேற்றே ஷிவானி நாராயணன் சூப்பராக அவரது ஆர்மியினரால் சேவ் செய்யப்பட்டார்.
அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

14 வயதில்
மே 5ம் தேதி 2001ம் ஆண்டு பிறந்த ஷிவானி நாராயணன், தனது 14வது வயதிலேயே, மாடலிங் துறையில் அடியெடுத்து வைத்து விட்டார். கடந்த 2015ம் ஆண்டு விளம்பர படங்களில் மாடலாக போஸ் கொடுத்து நடிக்க ஆரம்பித்த ஷிவானிக்கு 2016ம் ஆண்டு அவரது 15வது வயதிலேயே சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

சீரியல் நடிகை
சரவணன் மீனாட்சி சீசன் 3ல் காயத்ரி என்கிற ரோலில் அறிமுகமான ஷிவானி நாராயணன், பகல் நிலவு சீரியலில் லீடு ரோலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்தார்.

அதிகரிக்கும் ரசிகர்கள்
பிக் பாஸ் வீட்டுக்கு வருவதற்கு முன்னதாக ஷிவானி நாராயணன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் 2 மில்லியன் ரசிகர்கள் தான் இருந்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு, தினம் தோறும் அவருக்கு ஏகப்பட்ட புது ஃபாலோயர்கள் உருவாகி வருகின்றனர். இப்போ 2.3 மில்லியன் ரசிகர்கள் அவரை பின் தொடர்கின்றனர். சீக்கிரமே 3 மில்லியனை தொடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளாடை தெரியும்படி
சீரியலில் நடிக்கும் முன்னதாகவே ஃபேஷன் துறையில் அடியெடுத்து வைத்த ஷிவானி நாராயணன், பிக் பாஸ் வீட்டுக்கு வருவதற்கு முன்னதாக இந்த லாக்டவுனில் ரசிகர்களை ஈர்க்கும் விதமாக ஏகப்பட்ட கவர்ச்சியான போட்டோக்களை போட்டு அசத்தி வந்தார். கருப்பு நிற டிரான்ஸ்பரன்ட் டாப்ஸ் அணிந்து உள்ளே அணிந்திருக்கும் உள்ளாடை தெரியும் படி இவர் பதிவிட்ட போட்டோவுக்கெல்லாம் லட்சக் கணக்கில் லைக்குகள் குவிந்தன.

பிடித்த விஷயங்கள்
பிரெஞ்சு ஃபிரைஸ், குலாப் ஜாமுன், காபி, டான்ஸ் ஆடுவது, நீச்சல் அடிப்பது இது தான் நம்ம ஷிவானி நாராயணனுக்கு ரொம்பவே பிடிச்ச விஷயம். பிக் பாஸ் வீட்டில் நீச்சல் குளத்தை மூடி விட்டதால், நீச்சல் உடையில் ஷிவானியை காணும் பாக்கியத்தை ரசிகர்கள் பெற முடியாமல் போய்விட்டது.

கருப்பு சேலை கட்டிக்கிட்டு
பிக் பாஸ் வீட்டுக்குள் ஷிவானி நுழைந்த நிலையில், அவரது அம்மா அகிலா நாராயணன், தொடர்ந்து ஷிவானியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆக்டிவாக வைத்துள்ளார். இப்போ அவர் பதிவிட்டுள்ள ஷிவானியின் கருப்பு நிற சேலை போட்டோவை பார்த்த ரசிகர்கள், கவர்ச்சி சிலையா இருக்கிறாரே என லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











