தொடையழகை காட்டி ரசிகர்களை திணறடிக்கும் ஷிவானி...வைரலாகும் ஃபோட்டோ
சென்னை : விஜய் டிவி.,யில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஷிவானி நாராயணன். அதற்கு பிறகு சில சீரியல்களில் மட்டும் நடித்தார். பெரிய அளவில் வாய்ப்புக்கள் ஏதும் கிடைக்கவில்லை. இதனால் விஜய் டிவி.,யில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
பிக்பாஸ் சீசன் 4 ல் போட்டியாளராக கலந்து கொண்ட ஷிவானி, ஆரம்பத்தில் யாருடன் பேசாமல் ஒதுங்கி இருந்தார். பின்னர் பாலாஜியை காதலிப்பது போன்று காட்டி, டிஆர்பி.,யை ஏற்றினர். ஒவ்வொரு வாரமும் ஷிவானி வெளியேற்றப்படுவார் என பார்வையாளர்கள் எதிர்பார்க்கும் நிலை ஏற்பட்டது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்
ஆனால் கடைசி சில வாரங்களில் பிக் அப் ஆன ஷிவானி, போட்டிகளில் சீரியசாக பங்கேற்றார். அதிலும் சிங்கப் பெண் சுற்றில் கடைசி வரை பிடித்த கயிற்றை விடாமல் நின்று ஷிவானி வெற்றி பெற்றார். இது பலரிடமும் வரவேற்பை பெற்றது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அதிகம் பிரபலமான ஷிவானி சமூக வலைதளங்களில் படுஆக்டிவாக காணப்பட்டார்.

கவர்ச்சி ஃபோட்டோக்கள் பிரபலம்
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி ஃபோட்டோக்கள், நடனம் வீடியோக்கள் வெளியிட்டு பரபரப்பை கூட்டி வந்தார். இவர் வெளியிடும் கவர்ச்சி ஃபோட்டோக்களுக்கு தனி ரசிகர் கூட்டமே உண்டு. இந்நிலையில் சமீபத்தில் ஓய்விற்காக ஷிவானி தனது தாயாருடன் மாலத்தீவு சென்றார். அங்கு சென்றும் தொடர்ந்து கவர்ச்சி ஃபோட்டோக்களை வெளியிட்டார்.

வைரலான பதிவுகள்
நயன்தாரா போன்று உடைணிந்து கடற்கரையில் இவர் நடனமாடிய வீடியோ, இவர் வெளியிட்ட பிகினி ஃபோட்டோ, நீச்சல் குளத்தில் மிதந்தபடி இருக்கும் ஃபோட்டோக்கள் ஆகியன வைரலாகி, லட்சக்கணக்கில் லைக்குகளை அள்ளின. தொடர்ந்து மாலத்தீவில் இருந்து வரும் ஷிவானி, விதவிதமாக ஃபோட்டோஷூட் நடத்தி வருகிறார்.

மாலத்தீவில் கவர்ச்சி
லேட்டஸ்டாக தொடையழகை காட்டி, கவர்ச்சி ஃபோட்டோ ஒன்றை இன்று அவர் வெளியிட்டுள்ளார். இதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. சினிமா நடிகைகள் பலருக்கும் டஃப் கொடுக்கும் வகையில் ஷிவானி வெளியிட்டு வரும் கவர்ச்சி ஃபோட்டோக்கள் மற்ற நடிகைகளுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











