லுங்கியில் இன்னாம்மா போஸ் கொடுக்கிறாரு ஷிவானி.. இந்த பர்ஃபார்மன்ஸை எல்லாம் உள்ள பண்ணியிருந்தா?
சென்னை: பிக் பாஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஷிவானி நாராயணன் லுங்கி டான்ஸ் ஆடும் புகைப்படத்தை விஜய் டிவி வெளியிட்டு வைரலாக்கி உள்ளது.
இது போன்ற மாஸ் காட்டும் பர்ஃபார்மன்ஸை பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது பண்ணியிருந்தா நீங்க தான் டைட்டில் வின்னர் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
அம்மாவுடன் இருக்கும் அழகான புகைப்படத்தையும் ஷிவானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

25 லட்சம் பேர்
பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்ட ஷிவானி நாராயணனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 25 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். அவர்கள் அனைவரும் ஒரு நாள் மட்டும் ஷிவானிக்காக 50 ஓட்டுக்கள் போட்டு இருந்தாலே 12 கோடிக்கும் அதிகமான வாக்குகள் ஷிவானிக்கு கிடைத்திருக்கும்.

கை விட்ட அம்மா
ஆரம்பத்தில் சில வாரங்கள் ஷிவானி நாமினேஷனுக்கு வரும் போதெல்லாம் இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை போட்டு தனது மகளை காப்பாற்றிய ஷிவானியின் அம்மா, பிக் பாஸ் வீட்டுக்கு வந்து அவரை திட்டிவிட்டு சென்ற பிறகு இன்ஸ்டாகிராம் பக்கத்தையே கண்டு கொள்ளவில்லை. அதன் காரணமாகவே ஷிவானிக்கு அவரது ரசிகர்கள் ஓட்டுப் போடவில்லை என்றும் கூறுகின்றனர்.

பாலா பின்னாடியே
எவிக்ட் ஆகி வெளியேறும் வாரத்தில் ஷிவானி நாராயணன் சிங்கப்பெண்ணாக கெத்தாக விளையாடியது போல ஆரம்பத்தில் இருந்தே அவர் விளையாடி இருந்தாலும், அவருக்குத்தான் டைட்டில் கிடைத்திருக்கும் என்றும் பாலா பின்னாடியே விளையாடியதால் ஷிவானிக்கு பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரிய ஈர்ப்பு ஏற்படவில்லை என்றும் கூறுகின்றனர்.

அம்மாவுடன் போட்டோ
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் மீண்டும் இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை பதிவிட தொடங்கி உள்ள ஷிவானி நாராயணன் தனது அம்மா அகிலாவுடன் இருக்கும் அழகான போட்டோவை பதிவிட்டு என்னோட எல்லாமே இவர் தான் என கேப்ஷன் கொடுத்து வைரலாக்கி உள்ளார்.

ரவுடி கட்டு
பிக் பாஸ் தமிழ் சீசன் 4 போட்டியாளர்களின் வெற்றியை கொண்டாடும் விதமாக வரும் ஞாயிற்றுக் கிழமை ஒளிபரப்பாகவுள்ள பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் லுங்கி அணிந்து கொண்டு ரவுடி கட்டு கட்டிக் கொண்டு கூலர்ஸ் போட்டுக் கொண்டு ஷிவானி செய்துள்ள அட்டகாசமான பர்ஃபார்மன்ஸ் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.

விஜய் டிவி சீரியலில்
பிக் பாஸ் நிகழ்ச்சியை முடித்த கையோடு ரம்யா பண்டியனுக்கும் சம்யுக்தாவுக்கும் சினிமா வாய்ப்புகள் கிடைத்த நிலையில், ஷிவானி நாராயணனுக்கு விஜய் டிவியில் புதிய சீரியலில் நடிக்கும் வாய்ப்பு தான் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சீக்கிரமே ஷிவானிக்கும் சினிமா வாய்ப்புகள் கிடைக்க வாழ்த்துக்கள்!


Click it and Unblock the Notifications











