பிக் பாஸ் வீட்டில் புதுசா வரப் போறது யார் தெரியுமா? ஷிவானிக்கும் இவருக்கும் அப்படியொரு கனெக்ஷனாம்!
சென்னை: பிக் பாஸ் வீட்டில் புதுசா இன்னும் இரண்டு பேர் வைல்டு கார்டு என்ட்ரியாக வரப்போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
நம்ம பிகில் பாண்டியம்மாவும், பகல் நிலவு அர்ஜுனும் என்ட்ரியாக உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகும் போட்டியாளர்கள் குறித்த அனுமானங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளாகவே இருந்த நிலையில், இவர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சீக்கிரமே நுழைவார்கள் என தெரிகிறது.

ஒரு மாசம்
பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 4ம் தேதி தொடங்கியது. ஒரு மாத காலம் ஆகியும் இன்னமும் பிக் பாஸ் வீட்டில் 16 போட்டியாளர்களே நிரம்பி வழிகின்றனர். இந்த வாரம் ஒருவர் வெளியேற உள்ள நிலையில், புதுசா இருவர் உள்ளே நுழைய வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியை சுற்றி வெடித்துள்ள சர்ச்சைகளை பார்த்தால், இரண்டு பேர் கூட வெளியேறினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

’பகல் நிலவு’ அசீம்
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பகல் நிலவு' சீரியலில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் முகமது அசீம். இவர் தான் பிக் பாஸ் வீட்டிற்கு கடைசியாக நுழையப் போகும் ஆண் போட்டியாளர் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் முகமது அசீம், பகல் நிலவு, பிரியமானவளே, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

ஷிவானியுடன் கனெக்ஷன்
பிக் பாஸ் வீட்டின் செல்லக் குட்டியாகவும் கொலு பொம்மையாகவும் திகழும் ஷிவானிக்கு இவர் தான் பகல் நிலவு சீரியலில் ரீல் ஜோடி, இருவரும் இணைந்து நெருக்கமாக செய்துள்ள டிக் டாக் வீடியோக்கள் எல்லாம் தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. பிக் பாஸ் வீட்டில் இவர் இடம்பெற்றால், இன்னொருவருக்கு கடும் போட்டி இருக்கும் என்றும் தெரிகிறது.

பாலாஜியை தூக்கி சாப்பிடுவாரா
சின்னத்திரை நடிகர் முகமது அசீம், பிக் பாஸ் வீட்டுக்குள் நுழையும் பட்சத்தில், பாலாஜி முருகதாஸ் மற்றும் ஷிவானிக்கும் இடையே ஏற்பட்ட லவ் டிராக்கில் விரிசல் விழுமா? பாலாஜி பிக் பாஸ் வீட்டில் செய்யும் அட்டகாசங்களை அசீம் வந்து அடக்குவாரா? என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் பிக் பாஸ் ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர்.

ரெட் கார்டு கொடுத்தா
சனம் ஷெட்டியின் அந்த புகார் கடிதம் ஸ்க்ரீன் ஷாட் எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி வருகிறது. ஒரு வேளை பாலாஜி முருகதாஸுக்கு அழுத்தத்தின் காரணமாக திடீரென ரெட் கார்டு கொடுக்கும் சூழ்நிலை உருவானால் அதற்கு பேக்கப்பாக ஒருவர் வேண்டும் என்று இப்போதே உஷாராகி அவரை குவாரண்டின் செய்துள்ளார்களா என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.
Recommended Video

’பிகில்’ பாண்டியம்மா
நடிகர் ரோபோ சங்கரின் மகளும் தளபதி விஜய்யின் ‘பிகில்' படத்தில் பாண்டியம்மா ரோலில் நடித்து ரசிகர்களின் ஃபேவரைட் ஆன, இந்திரஜா சங்கரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்த வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைய உள்ளார் என்கிற தகவல்களும் பரவி வருகின்றன. மறுபடியும் விஜய் டிவியை சேர்ந்தவர்களே கலந்துக்கிறாங்களே என்றால், வேறு வழியில்லை பாஸ்!


Click it and Unblock the Notifications











