லுங்கியை தூக்கிக் கொண்டு ஆடிய ஷிவானி, சம்யுக்தா, கேபி.. வாய் பிளந்து பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள்!

சென்னை: பிக் பாஸ் வீட்டில் காலை விடிந்ததும் போட்ட பாட்டுக்கு ஷிவானி, சம்யுக்தா, கேபி, ரம்யா பாண்டியன் உள்ளிட்ட எல்லா பெண்களும் லுங்கி கட்டிக் கொண்டு ஆடியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

பிக் பாஸ் வீட்டில் தினம் தோறும் பாட்டு போட்டு எழுப்புவதும், அடுத்த செகண்டே எழுந்து கார்டன் ஏரியாவில் குத்தாட்டம் போடுவதும் வழக்கம்.

இன்னைக்கு டான்ஸ் இன்னும் கொஞ்சம் கவர்ச்சி தூக்கலாகவே இருந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

விடிந்ததும் டான்ஸ்

விடிந்ததும் டான்ஸ்

முதல் சீசனில் பாட்டு போட்டவுடன் நடிகை ஓவியா எழுந்து ஆடத் தொடங்கினார். அவர் ரசிகர்கள் மத்தியில் செம வைரலான நிலையில், ஒவ்வொரு சீசனிலும் பாட்டுப் போட்டா எல்லா போட்டியாளர்களும் எழுந்து வந்து உடனே டான்ஸ் ஆடத் தொடங்கி விடுவார்கள்.

ஏகப்பட்ட இளம் பெண்கள்

ஏகப்பட்ட இளம் பெண்கள்

மற்ற சீசன்களை விட இந்த சீசனில் பெண் போட்டியாளர்கள் ரொம்பவே கலர்ஃபுல்லாக இருக்கின்றனர். ஷிவானி நாராயணன், ரம்யா பாண்டியன், கேபி, சம்யுக்தா, சனம் ஷெட்டி, அனிதா சம்பத் என, அர்ச்சனா, நிஷா என எல்லாரும் இறங்கி வந்து ஆடுவதை பார்ப்பதே தனி அழகு.

மொட்டை தாத்தா டான்ஸ்

மொட்டை தாத்தா டான்ஸ்

இந்த சீசனில் லுங்கியை கழட்டிக் கொண்டு மொட்டை தல சுரேஷ் தாத்தா ஆடிய வீடியோ க்ளிப் வேற லெவலில் வைரலானது. கண்ணாடி ரெஃப்லெக்‌ஷனில் தெரிந்த அவரது அந்த அட்டாகாசத்தையும் பிக் பாஸ் ரசிகர்கள் கண்டு ரசித்தனர். இந்த சீசனில் தலையில் துண்டை போட்டுக் கொண்டு தாத்தா ஆடுவது எல்லாம் வேற லெவல் வெறித்தனம்.

ஒத்த சொல்லால

ஒத்த சொல்லால

பிக் பாஸ் நிகழ்ச்சியின் புதிய எபிசோடில் காலையில் எழுந்தவுடன் ஷிவானி நாராயணன், ரம்யா பாண்டியன், சம்யுக்தா, கேபி, சனம் எல்லாம் சேர்ந்து கொண்டு, லுங்கியை தூக்கி வைத்துக் கொண்டு தனுஷின் ஒத்த சொல்லால பாட்டுக்கு செம செக்ஸியா டான்ஸ் ஆடியதை பார்த்த ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

தாத்தா லுங்கி

தாத்தா லுங்கி

பிக் பாஸ் வீட்டில் இந்த சீசனில் லுங்கியை போட்டு அட்டகாசம் செய்வது நம்ம சுரேஷ் தாத்தா தான். அவருடைய லுங்கிக்களை ஆட்டையைப் போட்டு அத்தனை பெண்களும் ஆடியதை பார்த்த ரசிகர்களுக்கு, ஏற்கனவே இந்த பாட்டுத் தான் போடுறாங்கன்னு தெரிஞ்சு எடுத்துட்டு வந்து டான்ஸ் ஆடுறாங்களா என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X