Just In
Don't Miss!
- Sports
அவர் அணியைவிட்டு போனதும்.. எல்லோரும் பரிதாபபட்டனர்.. கோலி சொன்ன அந்த விஷயம்.. என்ன நடந்தது?
- News
தமிழகம் முழுவதும் 2-வது நாளாக பஸ் ஸ்டிரைக்.. பொதுமக்கள் கடும் அவதி
- Automobiles
2021ல் அறிமுகமாகும் அடுத்த ஸ்கோடா கார்... புதிய தலைமுறை ஃபேபியா!! மறைப்புகளுடன் படங்கள் வெளியீடு!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.02.2021: இன்று இந்த ராசிக்காரங்க ஆரோக்கியத்துல ரொம்ப கவனமா இருக்கணும்...
- Finance
Mphasis நிறுவன பங்குகள் விற்பனை.. தனி ஆளாக களத்தில் இறங்கும் கார்லைல்..!
- Education
ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மீண்டும் இன்ஸ்டாவுக்கு வந்த சிங்கப்பெண் ஷிவானி.. ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் மெசேஜ் சொல்லியிருக்காரு!
சென்னை: பிக் பாஸ் வீட்டில் அழகுப் பதுமையாக நுழைந்த ஷிவானி நாராயணன், சிங்கப்பெண்ணாக வெளியேறினார்.
சின்னத்திரை நடிகையான இவர், இன்ஸ்டாகிராமில் பதிவிடும் போட்டோவுக்கு லைக் போடுவதற்காகவே 2 மில்லியன் ரசிகர்கள் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.
உன்னை காதலிக்கிறேன்.. 30வது திருமண நாளில் மனைவிக்காக உருகும் சுரேஷ் தாத்தா!
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், ஷிவானி நாராயணன் மீண்டும் இன்ஸ்டாகிராமுக்கு வந்து ரசிகர்களுக்காக ஒரு மெசேஜ் சொல்லியுள்ளார்.

பாலாவுடன் நெருக்கம்
பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்திலேயே கார்னர் செய்யபட்ட ஷிவானி நாராயணன், அதன் பின்னர் பாலாஜி முருகதாஸ் உடன் நெருங்கி பழக ஆரம்பித்தார். தினமும் பாலாவை எழுப்பி விடுவது, ஊட்டி விடுவது என பாலா பின்னாடியே சுற்றியதை ரம்யா பாண்டியன் பாலா மாமா பாலா மாமான்னு ஷிவானி சுத்துறாரு என நேரடியாகவே கலாய்த்தார்.

ஒண்ணும் பண்ணல
பிக் பாஸ் வீட்டில் கடைசி வாரத்தில் எவிக்ட் ஆன ஷிவானி நாராயணன், பெருசா ஒண்ணுமே பண்ணல என்றும், மிக்சர் தின்னுட்டும் பாலாவை என்டர்டெயின் பண்ணிட்டும் தான் இருந்தார் என ஏகப்பட்ட ட்ரோல்களும் மீம்களும் ஒவ்வொரு நாள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகும் சமூக வலைதளங்களில் குவிந்து வந்தன.

ஷோ கேஸ் பொம்மை
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஷிவானி நாராயணனை எவிக்ட் செய்யாமல் வைத்திருக்க ஒரே காரணம் அவர் ஷோ கேஸ் பொம்மையாக நிகழ்ச்சியின் டிஆர்பியை உயர்த்த உதவுகிறார் என்றும் ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன. அதை நிரூபிக்கும் விதமாக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த ஷிவானியின் அம்மா அவரை வச்சு விளாசியதும் ஷிவானியின் பெயரை மேலும் டேமேஜ் செய்தது.

வரவேற்பு இல்லை
ரம்யா பாண்டியன் மீண்டும் வீட்டுக்கு போகும் போது, செண்டை மேளம் முழங்க ஆடல் பாடலுடன் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்ட வீடியோ வேற லெவலில் வைரலானது. ஆனால், ஷிவானி நாராயணனின் ஹோம் கம்மிங் வீடியோ மட்டும் இன்னமும் ரிலீசாகவில்லை. ஒருவேளை அம்மா கோபத்தால் இருந்ததால் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கவில்லையா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

மீண்டும் இன்ஸ்டாகிராமில்
பிக் பாஸ் வீட்டுக்குள் ஷிவானி இருக்கும் போதும், அவரது அம்மா ஷிவானிக்காக புரமோஷன் செய்து போட்டோக்களை பதிவிட்டு வந்தார். ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல் ஷிவானி மீது கோபமான அவர் அதன் பிறகு எந்தவொரு போஸ்ட்டும் போடவில்லை. இந்நிலையில், தற்போது மீண்டும் ஷிவானி தனது இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை போட ஆரம்பித்துள்ளார்.

ஆல் இஸ் வெல்
ஹாய் ஆல் என்று ஒரு போட்டோவையும், ஆல் இஸ் வெல் என்று இன்னொரு போட்டோவையும் ஷிவானி பதிவிட்டுள்ளார். அதை பார்த்த அவரது ரசிகர்கள் சிங்கப்பெண் ஷிவானிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தினமும் தொடர்ந்து பழையபடி போட்டோ போடுங்க என்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்த எதற்கும் கவலைப்படாதீங்க என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

சீக்கிரமே சினிமாவில்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட ரைசா வில்சன், லாஸ்லியா எல்லாம் சினிமாவில் நடிகைகளாக கலக்கி வரும் நிலையில், சீக்கிரமே டான்சிங் டாலான ஷிவானி நாராயணனும் ஹீரோயினாக பெரிய படத்தில் கலக்க வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர். லைவ் சாட்டில் வந்து பேசுங்க என்றும் கோரிக்கைகள் குவிந்து வருகின்றன.