ராஷ்மிகாவுக்கே டஃப் கொடுப்பாரு போல.. ’ரஞ்சிதமே’ பாட்டுக்கு ஷிவானி நாராயணன் போட்ட செம குத்து!

சென்னை: பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டு தற்போது தமிழ் சினிமாவில் யங் ஹீரோயினாக வலம் வரும் ஷிவானி நாராயணன் நடிகர் விஜய்யின் வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான ரஞ்சிதமே பாடலுக்கு வெறித்தனமாக நடனமாடியுள்ள குத்து டான்ஸ் வீடியோ டிரெண்டாகி வருகிறது.

அரபிக் குத்து பாட்டுக்கு வெளியான அளவுக்கு வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடலுக்கு நிறைய ரீல்கள் இன்னும் வரவில்லையே என பார்த்தால், ஷிவானி நாராயணன் அந்த குறையை போக்கி உள்ளார்.

சென்னை மழைக்கு சமீபத்தில் டான்ஸ் ஆடியிருந்த ஷிவானி ரஞ்சிதமே பாடலுக்கு நடனமாடியுள்ள வீடியோவுக்கு விஜய் ரசிகர்கள் லைக்குகளை போட்டு வருகின்றனர்.

பொங்கலுக்கு வருமா வராதா

பொங்கலுக்கு வருமா வராதா

வாரிசு படம் கன்ஃபார்ம் பொங்கல் என ஒரு க்ரூப்பும், துணிவு படம் தான் பொங்கல் ரிலீஸ் என ஒரு க்ரூப்பும் சொல்லி வருகிறது. சிலர் வாரிசு படம் பொங்கலுக்கு வராது என்றும் குடியரசு தின ரிலீஸாக வெளியாகும் என்றும் கூறி வருகின்றனர். விஜய் ரசிகர்கள் கடைசி வரை நடிகர் விஜய் போட்டிக்கு எல்லாம் பின் வாங்க மாட்டார் என்கிற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

ரஞ்சிதமே வியூஸ்

ரஞ்சிதமே வியூஸ்

ரஞ்சிதமே பாடல் 50 மில்லியனை நோக்கி மிகப்பெரிய அளவில் டிரெண்டாகி வருகிறது. இதுவரை 48 மில்லியன் பார்வைகளை இந்த பாடல் கடந்துள்ளது. விவேக் வரிகளில் விஜய் பாடி ஆடியுள்ள இந்த பாடல் தியேட்டரில் ரசிகர்களை கண்டிப்பாக துள்ளல் ஆட்டம் போட வைக்கும் என்பது கன்ஃபார்ம். அதிலும் தமன் பாடலின் கடைசியில் ஒரு நிமிடம் விஜய் நடனத்திற்காகவே இசையை தெறிக்கவிட்டு இருக்கிறார்.

ராஷ்மிகா ரீல்ஸ் போடல

ராஷ்மிகா ரீல்ஸ் போடல

பீஸ்ட் பட பாடலான அரபிக் குத்து பாட்டு வந்த உடனே அந்த படத்தில் நடித்த பூஜா ஹெக்டே நடனமாடி ரீல்ஸ் போட்டு இருந்தார். அதன் பின்னர், சமந்தா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் நடனமாடி இருந்தனர். ஆனால், ரஞ்சிதமே பாடல் வெளியான நிலையில், ராஷ்மிகா மந்தனா கூட தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ரீல்ஸ் கூட போடவில்லை.

ஷிவானி செம குத்து

ஷிவானி செம குத்து

இந்நிலையில், பிக் பாஸ் பிரபலமும் கோலிவுட்டின் யங் நடிகையுமான ஷிவானி நாராயணன் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரஞ்சிதமே பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ள வீடியோ டிரெண்டாகி வருகிறது. விஜய்யின் தீவிர ரசிகையான இவர் அரபிக் குத்து பாடலுக்கும், ஜாலியோ ஜிம்கானா பாடலுக்கும் நடனமாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.

துணி துவைக்கிறீங்க

துணி துவைக்கிறீங்க

ஷிவானி நாராயணன் செம ஹாட்டாக டான்ஸ் ஆடும் வீடியோவை விஜய் ரசிகர்கள் ஒரு பக்கம் தீயாக ஷேர் செய்து வரும் நிலையில், சில நெட்டிசன்கள் நல்லா துணி துவைக்கிறீங்க என பங்கமாக ட்ரோல் செய்தும் வருகின்றனர். விஜய்சேதுபதி கூட நடிச்சிட்டீங்க, கூடிய சீக்கிரமே விஜய் படத்திலும் நீங்க நடிக்கணும் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X