என்னது ஷிவானி அதிமுகவுல சேர்ந்துட்டாங்களா.. போட்டோவை பார்த்து கிளப்பிவிடும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் ஷிவானி ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அரசியல் கட்சியில் சேர்ந்துவிட்டாரா என கிளப்பி விட்டு வருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு மற்றும் கடைக்குட்டி சிங்கம் ஆகிய சீரியல்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில் அண்மையில் விஜய் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் பங்கேற்றார் ஷிவானி நாராயணன்.

பாலாஜியுடன் நெருக்கம்

பாலாஜியுடன் நெருக்கம்

இதில் பங்கேற்ற பிரபலங்கள் பலர் தங்களின் சுயரூபத்தை காட்டி பெயரைக் கெடுத்துக் கொண்ட நிலையில் ஷிவானியின் பெயர் ஒன்றும் பெரிதாக டேமேஜ் ஆகவில்லை. பாலாஜியுடன் நெருக்கமாக பழகியதால் கிசுகிசுக்கப்பட்டார்.

மிக்சர் ஷிவானி

மிக்சர் ஷிவானி

டாஸ்க்குகளில் பெரிதாக ஆர்வம் காட்டாததால் மிக்சர் என்று விமர்சிக்கப்பட்டார். ஆனால் பார்வையாளர்களிடம் மற்ற போட்டியாளர்களை போல் திட்டு வாங்கவில்லை. சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான ஃபாலோயர்ஸ்களை கொண்டுள்ள ஷிவானி அவ்வப்போது தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

கலக்கும் ஷிவானி

கலக்கும் ஷிவானி

சேலையில் குடும்ப குத்து விளக்காகவும் மாடர்ன் உடையிலும் கன்னாபின்னாவென போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார் ஷிவானி. இந்நிலையில் ஷிவானி தற்போது மேலும் ஒரு போட்டோவை ஷேர் செய்து கலக்கியுள்ளார்.

எப்போ கட்சியில் சேர்ந்தீங்க?

எப்போ கட்சியில் சேர்ந்தீங்க?

கறுப்பு பேண்ட் அணிந்துள்ள ஷிவானி, தொப்புள் தெரிய கட்சிக் கொடி போன்ற க்ராப் டாப் சட்டையை அணிந்துள்ளார். ஷிவானியின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், எப்போ அந்தக் கட்சியில் சேர்ந்தீர்கள் என கேட்டு வருகின்றனர்.

எடுத்தது யார் தெரியுமா?

எடுத்தது யார் தெரியுமா?

இன்னும் சிலர் செம க்யூட்டா இருக்கீங்க என்றும் அழகு என்பதற்கு அர்த்தம் ஷிவானிதான் என்றும் கூறி வருகின்றனர். இதனிடையே ஷிவானி தன்னுடைய இந்த போட்டோவை எடுத்தது ஸ்மைலிங் பியூட்டி ரம்யா பாண்டியன் என்று கூறி கேப்ஷன் கொடுத்துள்ளார்.

தன்னைத்தானே பாராட்டி

தன்னைத்தானே பாராட்டி


இதனை பார்த்த ரம்யா பாண்டியன் வாட் எ போட்டோகிராஃபர் என தன்னைத்தானே புகழ்ந்து கொண்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் நேற்று இரவு என்ன பார்ட்டியா என்றும் ஏதாவது ஷூட்டிங்கில் பங்கேற்றீர்களா என்றும் கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X