For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  எவிக்ஷன் ஆகிடக் கூடாது பிகிலு.. சைலன்ட்டா ஷிவானி நாராயணன் செய்யும் வேலை.. என்ன தெரியுமா?

  |

  சென்னை: பிக் பாஸ் தமிழ் 4 சீசனில் இளம் போட்டியாளராக களமிறங்கி உள்ள ஷிவானி நாராயணன் ஆரம்பத்திலேயே எவிக்‌ஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

  சீரியல் நடிகையான ஷிவானி நாராயணன், இந்த சீசனின் ஹாட் போட்டியாளராக பிக் பாஸ் வீட்டை கலக்கி வருகிறார்.

  பாட்டு போட்டுட்டா போதும், எங்கிருந்தாலும், செம குத்தாட்டம் போட்டு தனது ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறார்.

  அடப்பாவிகளா.. 10அடி நடந்து வரவே மணி 2 ஆகிபோச்சே.. அப்போ பஞ்சாயத்து? புரமோவால் கடுப்பான ஃபேன்ஸ்!

  அழுகாச்சி கதை சொல்லல

  அழுகாச்சி கதை சொல்லல

  மற்ற போட்டியாளர்கள் சொன்னது போல எந்த ஒரு அழுகாச்சி கதையும் சொல்லாமல், ஹேப்பியா, கெத்தா தனக்கே உரிய ஸ்டைலில் கூலா குட்டி ஸ்டோரி சொல்லிவிட்டு சென்று விட்டார். அவர் சொன்ன கதை இம்பாக்ட் பண்ணவில்லை என பாலாஜி முருகதாஸ் மற்ற போட்டியாளர்களை கன்வின்ஸ் பண்ணி அவரை எவிக்‌ஷனுக்கு நாமினேட் செய்தார்.

  ஷிவானி மேல பயம்

  ஷிவானி மேல பயம்

  மற்ற போட்டியாளர்களுக்கு ஷிவானி மேல ஒரு பெரிய பயம் இருக்கு, அது என்னன்னா அவருடைய ரசிகர்கள் பலம் தான். நடிகர் ஆரி அர்ஜுனா கூட அந்த பாயின்ட்டை வைத்தே அவரை தாக்கினார். ஆனால், சமத்துப் பிள்ளையாக ஒன்றுமே தெரியாதவர் போல அதில் இருந்து ஷிவானி தப்பித்து விட்டார்.

  ஏகப்பட்ட புரோக்கன் ஹார்ட்

  ஏகப்பட்ட புரோக்கன் ஹார்ட்

  எவிக்‌ஷனுக்கு தகுதியானவர்கள் என தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 8 பேரை தான் மற்ற போட்டியாளர்கள் எவிக்‌ஷனுக்கு நாமினேட் செய்ய முடியும் என பிக் பாஸ் கூறியுள்ளார். ஏற்கனவே ஏகப்பட்ட போட்டியாளர்கள் ஷிவானிக்கு புரோக்கன் ஹார்ட் கொடுத்த நிலையில், எவிக்‌ஷனுக்கும் அவரது பெயரை தாராளமாக பரிந்துரைப்பார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.

  மாஸ்டர் பிளான்

  மாஸ்டர் பிளான்

  பிக் பாஸ் வீட்டில் இருக்கும் தன்னை எப்படி விஜய் டிவி வெளிப்படுத்தும் என்றும், புரமோவில் தன்னை காட்டுவார்களா? மாட்டார்களா? என்றும் தெரியாத நிலையில், தன்னை வெளியேற்றும் நிலை வந்தால், உடனடியாக இன்ஸ்டாகிராம் ரசிகர்களை முடுக்கி விட தனது அம்மாவிடம் இன்ஸ்டா அக்கவுன்ட் ஆயுதத்தை கொடுத்து விட்டு வந்துள்ளார் ஷிவானி.

  ரசிகர்களை ஒருங்கிணைக்க

  ரசிகர்களை ஒருங்கிணைக்க

  தினமும் 5 மணிக்கும், 4 மணிக்கும் போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு 2.2 மில்லியன் ரசிகர்களை வைத்துள்ள நடிகை ஷிவானி நாராயணன், தற்போது நாய்க்குட்டி ஒன்றை வைத்திருக்கும் அட்டகாசமான புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. பிக் பாஸ் வீட்டில் இருந்தாலும், ரசிகர்களை ஒருங்கிணைக்க இப்படி ஒரு வேலையை சைலன்ட்டா ஷிவானி செய்து வருகிறார்.

  100 நாட்களுக்கும் போட்டோவா

  100 நாட்களுக்கும் போட்டோவா

  ஷிவானி நாராயணனின் இன்ஸ்டா பக்கத்தில் இந்த போட்டோ வெளியான சில மணி நேரத்திலேயே லட்சக் கணக்கான லைக்குகள் வழக்கம் போல குவிந்துள்ளன. 100 நாட்களுக்கும் 100 போட்டோக்களை ஏற்கனவே எடுத்து அம்மா கிட்ட கொடுத்துட்டு போய்ட்டாங்களோ என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

  மேக்கப் போட சொல்லுங்கம்மா

  மேக்கப் போட சொல்லுங்கம்மா

  இன்ஸ்டாகிராமில் வெண்ணெய் சிலையாக பார்த்த ஷிவானியை பிக் பாஸ் வீட்டில் டம்மி டப்பாசாக பார்க்க முடியலை, கொஞ்சமாச்சும், முகம் கழுவி, பவுடரோ மேக்கப்போ கொஞ்சம் போட சொல்லுங்கம்மா, இந்த வயசுலயும் ரேகா பாட்டி அப்படி மேக்கப் பண்ணுறாங்க, ஷிவானியும் மேக்கப் பண்ணா நல்லா இருக்கும் என நக்கலடித்துள்ளார் இன்னொரு நெட்டிசன்.

  நாங்க இருக்கோம்

  நாங்க இருக்கோம்

  மேலும், ஏகப்பட்ட ஷிவானி ரசிகர்கள், செல்லாக்குட்டி நாங்க இருக்கோம், நீ ஒண்ணும் கவலைப் படாத, எத்தனை ஓட்டு வேணா போட்டு உன்னை பிக் பாஸ் நிகழ்ச்சியில ஜெயிக்க வைக்க ரெடி என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. கண்டிப்பா முதல் வார எவிக்‌ஷன் லிஸ்டில் ஷிவானி நாமினேட் செய்யப்பட்டாலும், ரசிகர்களின் ஓட்டுக்களால் சேவ் பண்ணப் படுவார் என்பது உறுதி.

  English summary
  Shivani Narayanan silent process for not get evict from Bigg Boss Tamil 4 house. She arranged a team to share her photos in her instagram page.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X