ஷிவானி நாராயணனுக்கு திருமணமா? மணப்பெண் உடையில் பார்த்ததும் ஸ்தம்பித்துப் போன ரசிகர்கள்!
சென்னை: பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்ட ஷிவானி நாராயணன் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் இப்படியொரு கேள்வியை எழுப்பி உள்ளது.
பகல் நிலவு சீரியல் மூலம் பளிச்சென தனது அழகை காட்டி ஏகப்பட்ட சின்னத்திரை ரசிகர்களை பஞ்சராக்கிய ஷிவானி நாராயணன் இன்ஸ்டாகிராமில் தினமும் 5 மணி பஸ்ஸாக வந்து கலக்கல் போஸ் கொடுத்து ஃபாலோயர்களையும் மில்லியன் கணக்கில் அதிகரித்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினிமாவில் இளம் நடிகையாக கலக்கி வரும் 21 வயதே ஆன ஷிவானி நாராயணனின் லேட்டஸ்ட் புகைப்படம் பலரது கவனத்தை கவர்ந்துள்ளது.

சின்னத்திரை ஷிவானி
16 வயதிலேயே சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்து விட்டார் ஷிவானி. விஜய் டிவியில் வெளியான பகல் நிலவு சீரியலில் நடிக்கத் தொடங்கிய ஷிவானி தொடர்ந்து சரவணன் மீனாட்சி, ராஜா ராணி, கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா என பல சீரியல்களில் நடித்து வந்தார். பிக் பாஸில் இணைவதற்கு முன்பாகவே இன்ஸ்டாகிராமில் இவருக்கு 2 மில்லியன் ரசிகர்கள் இருந்தனர்.

4வது சீசனில்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் 4வது சீசனில் ஷிவானி நாராயணன் போட்டியாளராக கலந்து கொண்டர். அவரது பப்ளினஸை பார்த்து மேலும், ரசிகர்கள் அதிகரித்தனர். பாலாஜி முருகதாஸ் உடன் நெருக்கமாக பழகி வந்தார் ஷிவானி. அதற்காக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த அவரது அம்மா ஷிவானியை கண்டித்த டிராமாக்கள் எல்லாமே சூப்பராக அரங்கேறின. பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியேறிய பின்னர் ஒவ்வொரு பர்த்டே பார்ட்டியிலும் பாலாவும் ஷிவானியும் ஒன்றாக அவரது அம்மாவுடனே போஸ் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

5 படங்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியிலேயே கமலின் ஃபேவரைட் போட்டியாளரான ஷிவானி நாராயணனுக்கு அவரது தயாரிப்பில் வெளியான விக்ரம் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து ஆர்ஜே பாலாஜியின் வீட்ல விசேஷம், வடிவேலு உடன் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ், மீண்டும் விஜய்சேதுபதி உடன் டிஎஸ்பி என நடித்து வந்த ஷிவானி வெற்றி உடன் இணைந்து பம்பர் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

மணப்பெண் கோலத்தில்
சினிமாவில் பிசியான நடிகையாக மாறிய ஷிவானி நாராயணன் சமீப காலமாக இன்ஸ்டாகிராமில் அதிகமாக போட்டோக்களை போடுவதே இல்லை. இந்நிலையில், திடீரென சனிக்கிழமை ஸ்பெஷலாக ரசிகர்களுக்காக ஒரு போஸ்ட் போட்டிருக்கிறார். அந்த போஸ்ட்டில் அழகான மணப்பெண்ணாக காட்சியளிக்கிறார் ஷிவானி நாராயணன்.

திருமணமா
ஷிவானி நாராயணன் போட்டோஷூட் நடத்தியது போல ஏகப்பட்ட போட்டோக்களை பதிவிடாமல் ஒரே ஒரு போட்டோவை மட்டுமே பதிவிட்டுள்ள நிலையில், என்ன ஷிவானி உங்களுக்கு திருமணமா என ரசிகர்கள் குழப்பத்துடன் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். 21 வயது தான் ஆகுது இன்னும் பல படங்களில் ஹீரோயினாக நடித்து விட்டு பொறுமையா கல்யாணம் பண்ணிக்கோங்க என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











