ப்ப்பா..என்ன அழகு..சொக்க வைக்கும் ஷிவானி நாராயணன்..ரசிகர்களை ஈர்க்கும் நச் ஸ்டில்ஸ்!
சென்னை : இன்ஸ்டா குயின் ஷிவானி நாராயணன் பனியனுடன் முரட்டுத்தனமாக லுக்குவிட்டதை பார்த்த ரசிகர்கள் மிரண்டுபோய் உள்ளனர்.
திரைத்துறையில் சினிமா நடிகைகளைவிட சின்னத்திரை நடிகைகளுக்குத்தான் இப்போது ஏகப்பட்ட மார்க்கெட். அதிலும் பிரைம் டைமில் ஒரு சீரியலில் நடித்துவிட்டால் போது, விரைவில் பிரபலமாகி விடலாம்.
அப்படி சீரியலில் அழுகு பதுமையாக, அமைதியின் சின்னமாக வந்த ஷிவானியின் ஆட்டத்தைப் பார்த்து மயங்கிப்போன ரசிகர்கள் அவரை இன்ஸ்டாகிராம் குயின் என்று செல்லமாக அழைத்து வருகின்றனர்.

ஷிவானி நாராயணன்
விஜய் டிவியில் பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரையில் எண்ட்ரி கொடுத்தவர் ஷிவானி. அந்த சீரியல் மூலம் ஏராளமாக ரசிகர்களை பெற்ற அவர், சரவணன் மீனாட்சி, ராஜா ராணி சீசன் 1, இரட்டை ரோஜா உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தார். ஷிவானி சீரியலில் பிரபலமானதை விட இன்ஸ்கிராமில், கவர்ச்சி போட்டோ, ரீல்ஸ் வீடியோவை போட்டு இணையத்தை திணறடித்தார்.

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக
சோஷியல் மீடியாவில் கிடைத்த வரவேற்பால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போன ஷிவானி, இன்ஸ்டாவில் கலக்குவது போல கலக்குவாருனு பார்த்தா, பெருசா எதையும் செய்யாததால் எலிமினேட்டாகி பாதியிலே வெளியில் வந்தார். இதையடுத்து, ஷிவானிக்கு அடுத்தடுத்த படங்களில் கமிட்டானார். விக்ரம், வீட்ல விசேஷம் போன்ற படங்களில் ஷிவானிக்கு வாய்ப்பு கிடைத்தது. விக்ரம் படத்தில் விஜய்சேதுபதி மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார்.

ஷாப்பிங் போலாமா
அவ்வப்போது படவாய்ப்புகள் தன்னை வளர்த்துவிட்ட ரசிகர்களை மறக்காத ஷிவானி பளபளக்கும் முதுகை காட்டி போஸ் கொடுத்திருந்தார். இந்த போஸை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போய் இதயத்தை பரிசாக அளித்து வந்தனர். தற்போது, புது போட்டோவை ஷிவாணி ஷேர் செய்துள்ளார். அதில் பனியனுடன் ஷாப்பிங் போலாமா என கேட்டுள்ளார். இந்த போட்டோவுக்கு லைக் குவிந்து வருகிறது.

பம்பர் படத்தில்
ஷிவானி நாராயணன் தற்போது இயக்குனர் எம்.செல்வகுமார் இயக்கத்தில் நடிகர் வெற்றி ஹீரோவாக நடிக்கும் பம்பர் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டு இருந்தது. கேரளா லாட்டரியை மையமாக வைத்து இந்த படம் உருவாக உள்ளது.


Click it and Unblock the Notifications











