திடீரென கதறி அழுத ஷிவானி.. பாத்ரூம் ஏரியாவில் ஆறுதல் சொன்ன அர்ச்சனா, ரம்யா.. பாலா தான் காரணமா?

சென்னை: பிக் பாஸ் எடிட்டர் இஷ்டத்துக்கு சீன்களை கட் பண்ணி ஒட்டுவதால், சில நேரங்களில் ரசிகர்களுக்கு என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை.

பாலாவுடன் படுக்கையறையில் படு ரொமான்ஸாக பேசிய ஷிவானி நாராயணன், நேற்று அர்ச்சனாவின் தோளில் சாய்ந்து கொண்டு திடீரென கதறி அழ ஆரம்பித்தார்.

என்ன ஆச்சு ஷிவானி என அர்ச்சனா கேட்டு, அவரை அப்படியே பாத்ரூமுக்குள் அழைத்துச் சென்றார்.

காதலா அன்பா

காதலா அன்பா

ஷிவானிக்கும் பாலாவுக்கும் இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் காதலா? அன்பா? அண்ணன் தங்கை உறவா? நட்பா? எது தான் அவர்களுக்குள் என்பதே தெரியாமல் 68 நாட்கள் கடந்து விட்டன. ஊட்டிவிடுவதும், கொஞ்சி பேசிக் கொள்வதும், காமப் பார்வையுடன் பார்ப்பதும் என இருவரும் எக்கச்சக்கமாக ரொமான்ஸ் செய்து வருகின்றனர்.

குண்டு ரோபோ

குண்டு ரோபோ

இந்த வாரம் லக்சரி பட்ஜெட் டாஸ்க்கான ரோபோ டாஸ்க்கில் ஷிவானி நாராயணன் கவர்ச்சி ரோபோவாக கலக்கிய நிலையில், பாலா மட்டும் அவரை குண்டு ரோபோ என கிண்டல் செய்து கடுப்பேற்றினார். அதன் பின்னர் பாலாவுடன் முறைத்துக் கொண்டு விலகிச் சென்றார் ஷிவானி.

படுக்கையறையில் ரொமான்ஸ்

படுக்கையறையில் ரொமான்ஸ்

சண்டை போட்ட சுவடே தெரியாமல், பாலா தனக்காக சப்போர்ட் பண்ண யாருமே இல்லை என்றதும், நான் இருக்கேன் பாலா என அவரை அன்போடு அரவணைத்து, படுக்கையறையில் ரவுடிசம்லாம் பண்ணாத என போடா, போடி என சொல்லிக் கொண்டு இருவரும் ரொமான்ஸ் பண்ணினார்கள்.

திடீரென அழுத ஷிவானி

திடீரென அழுத ஷிவானி

இந்நிலையில், நேற்றைய எபிசோடில் இந்த கேம்ல நான் என்ன பண்றேன்னு தெரியலையே என அர்ச்சனாவிடம் பேசிய ஷிவானி திடீரென அழ தொடங்கினார். ரொம்ப யோசிக்காத, நெக்ஸ்ட் என்ன நடக்கும்னு உனக்குத் தெரியாதா என சொன்ன அர்ச்சனா உடனே அவரை பாத்ரூமுக்குள் அழைத்துச் சென்று, கேமரா இல்லாத இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ரம்யாவும் ஆறுதல் சொன்னார்

ரம்யாவும் ஆறுதல் சொன்னார்

ஷிவானி அழுததும் அர்ச்சனா பாத்ரூமுக்குள் அவரை அழைத்துச் செல்வதை பார்த்த ரம்யா பாண்டியன் பின்னாடியே சென்று ஷிவானியை ஆறுதல் படுத்தினர். டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த பாலாவிடம், அனிதா நீ தான் காரணமா? ஏன் அவ அழுகுறா எனக் கேட்க, நான் எதுவுமே பண்ணலையே என பாலா மறுத்தார்.

நான் தான் அக்யூஸ்ட்டா

நான் தான் அக்யூஸ்ட்டா

உடனே எழுந்து பாத்ரூம் ஏரியாவுக்கு வந்த பாலாஜி முருகதாஸ், நான் தான் அக்யூஸ்ட்டா? என ஷிவானியிடம் கேட்க, அர்ச்சனா பாலாவிடம் நீ இல்லை போ என வெளியேற்றினார். ஷிவானி திடீரென அழுததும் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கவலைப் படாத ஷிவானி நாங்க ஓட்டுப் போட்டு காப்பாத்துறோம் என கமெண்ட்களை தெறிக்கவிடுகின்றனர்.

Recommended Video

பெண்களுக்கு முடிவெடுக்கும் உரிமை கூட தரமாட்றாங்க | ACTRESS LAKSHMI DEVY CHAT P-01 | FILMIBEAT TAMIL
வெளியேறும் பயம்

வெளியேறும் பயம்

சனம் ஷெட்டி மாதிரி, நீயும் வெளியே போயிட்டா எனக்கு யாருன்னு பாலா கேட்டதை மனதில் வைத்துக் கொண்டு, ஒரு வேளை இந்த வாரம் நாம் வெளியேறிவிடுவோமா என்கிற பயம் ஷிவானிக்கு ஏற்பட்டே அப்படி அழ ஆரம்பித்துள்ளார். இத்தனை நாட்கள் இருந்ததே பெரிய விஷயம். இனியும் இருக்க இப்படி டிராமா போடுறீயாம்மா என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X