குண்டு ரோபோ ஷிவானி.. கிண்டல் செய்த பாலா.. கடுப்பில் தானே ஹார்ட்டை கழட்டிப் போட்டு ஆவேசம்!
சென்னை: ஷிவானி நாராயணனை குண்டு ரோபோ என பாலாஜி முருகதாஸ் கிண்டல் செய்த நிலையில், அவர் பயங்கர கடுப்பாகி விட்டார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 4 துவங்கியதில் இருந்தே பாலாஜியும் ஷிவானியும் நெருங்கி பழகி வருகின்றனர்.
ரோபோ டாஸ்க்கில் இருவரையும் எதிர் எதிர் அணியில் இறக்கி விட்ட நிலையில், தற்போது முதல் முறையாக இருவருக்கும் இடையே சண்டை வெடித்துள்ளது.

குண்டு ரோபோ
ஷிவானி நாராயணனை பார்த்து குண்டு ரோபோ என பாலாஜி முருகதாஸ் கிண்டல் பண்ணது தனக்கு பிடிக்கவில்லை என ஷிவானி முன்னதாக கூறி விட்டு சென்ற நிலையில், ஷிவானியை தொடர்ந்து அந்த பெயரை வைத்தே பயில்வான் பாலா கலாய்த்து வந்தார். அதனால், ஷிவானி ரொம்பவே டென்ஷன் ஆகிட்டாங்க..

அனிதா வச்ச பேரு
அர்ச்சனாவுக்கு பாஸி ரோபோ என அனிதா பெயர் வைத்தது பிரச்சனையை கிளப்பியது. சோமுக்கு பப்பட் ரோபோ என்றும், கேபிக்கு கிரிஞ் ரோபோ, ஜித்தனுக்கு ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி ரோபோ என பெயர் வைத்த நிலையில் ஷிவானிக்கு அனிதா வச்ச பேரு மேக்கப் ரோபோ. ஆனால், அதை விட பாலா வைத்த குண்டு ரோபோ என்கிற பேர் தான் அவரை ஹர்ட் செய்தது.

ஷிவானியை கலாய்க்க
ரோபோவை ரோபோவை வைத்தே கிண்டல் செய்ய திட்டமிட்ட பாலாஜி முருகதாஸ், சோமசேகர் ரோபோவிடம் ஷிவானி ரோபோ எப்படி இருக்காங்கன்னு கேட்டார். அழகா இருக்காங்கன்னு ஸ்மார்ட்டா சோம் பதில் சொல்ல, குண்டா இருக்காங்களா? ஒல்லியான்னு பாலா கேட்க, மீடியம் என்று சோம் கண்ணியமாக பதில் சொன்னார்.

சிரிச்சா போச்சு
விஜய் டிவியின் அது இது எது ஷோவில் வரும் சிரிச்சா போச்சு ரவுண்டு போல, ஷிவானி நாராயணன் டக்கு டக்குன்னு சிரிச்சி அவுட்டாகிடுறாங்க, இப்படி கேம் ஆடவே தெரியாத போட்டியாளரை 66 நாட்களுக்கு வைத்திருப்பது எல்லாம் ரொம்ப கேவலம். ரியோவும், பாலாவும் கலாய்த்ததும் ஷிவானி சிரிக்க, ஒரு ஹார்ட்டை பறித்து விட்டனர்.

டென்ஷனாக்கிய பாலா
மறுபடியும் மறுபடியும் ஷிவானியை குண்டு ரோபோ என சொல்லு என சோமை டார்ச்சர் பண்ணி ஷிவானியை ரொம்பவே டென்ஷன் ஆக்கினார் பாலா. மேலும், மக்கு ரோபோ என்றும் ஷிவானிக்கு பட்டப் பெயர் வைத்து அவரை ரொம்பவே டீஸ் பண்ணார். இத்தனை நாள் சுத்தினதுக்கு நல்லா வேணும் என பிக் பாஸ் ரசிகர்கள் ஷிவானியை ட்ரோல் செய்து வருகின்றனர்.

ஹார்ட்டை பிச்சுப் போட்ட ஷிவானி
ஷிவானி சிரித்த விட்ட நிலையில், தொடர்ந்து அவரை குண்டு ரோபோ என பாலா வெறுப்பேற்றினார். அதனால், அவர் கோபம் ஆகிட்டார் என்று, இன்னொரு ஹார்ட்டை பிடுங்க வேண்டும் என பாலா சொன்னதும், நிஜமாகவே கோபப்பட்ட ஷிவானி தானாகவே தனது ஆடையில் குத்தி இருந்த ஹார்ட்டை பிடுங்கித் தூக்கிப் போட்டு கோபமாக கிளம்பினார்.

சமாதானப்படுத்திய ரியோ
ஷிவானி ரோபோ டென்ஷன் ஆகிட்டா என பாலா கலாய்த்ததும், இது தப்பு பாலா, போய் பேசி சமாதானப்படுத்து என்றார் ரியோ. இது கேம் அப்படித் தான் பண்ணுவேன். நேத்து அர்ச்சனாவை பாஸி ரோபோன்னு கலாய்க்கலையா அது போலத்தான் என்று ஷிவானியை கண்டுக்கவே இல்லை. ரியோ தான் ஷிவானி அருகே சென்று அவரை கட்டிப்பிடித்து சமாதானப்படுத்தினார்.


Click it and Unblock the Notifications











