நெற்றியில் நாமத்துடன் ஷிவானி.. எத்தனை வருஷம் கழித்து திருப்பதிக்கு போயிருக்காருன்னு பாருங்க!

சென்னை: பெயரிலேயே நாராயணன் என வைத்திருக்கும் ஷிவானி நாராயணன் திருப்பதிக்கு விசிட் அடித்துள்ள பக்தி பரவசமான புகைப்படங்களை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நயன்தாரா - விக்னேஷ் சிவன் தொடர்ந்து திருப்பதிக்கு சென்று வந்த நிலையில், சமீப காலமாக தீபிகா படுகோன், லோகேஷ் கனகராஜ் என ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் திருப்பதிக்கு விசிட் அடித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிக் பாஸ் பிரபலம் ஷிவானி நாராயணன் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார்.

கூட்டம் அள்ளுது

கூட்டம் அள்ளுது

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டாலும், திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது. அதிலும், நேற்று சனிக்கிழமை என்பதால் திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய பல மணி நேரங்கள் காத்திருந்து பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். இந்நிலையில், நடிகை ஷிவானி நாராயணனும் திருப்பதிக்கு சென்று வந்துள்ள புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.

திருப்பதியில் செருப்பு காலுடன்

திருப்பதியில் செருப்பு காலுடன்

திருப்பதியில் திருமணத்தை நடத்த பிளான் பண்ண நடிகை நயன்தாரா கடைசி நேரத்தில் நெட்பிளிக்ஸிற்கு திருமண காட்சிகளை விற்பனை செய்யும் வாய்ப்பு வந்த நிலையில், மகாபலிபுரத்தில் உள்ள ஷெரட்டன் பார்க் ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடத்தினார். ஆனால், மறுநாளே திருப்பதிக்கு கிளம்பிப் போய் சாமி தரிசனம் செய்த அவர், அங்கே போட்டோஷூட் நடத்தியும் செருப்பு காலுடன் நடந்து சென்றும் பெரும் சர்ச்சையை கிளப்பினார்.

திருப்பதியில் ஷிவானி

திருப்பதியில் ஷிவானி

விக்ரம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ஷிவானி நாராயணன் நடிப்பில் இந்த வாரம் வீட்ல விசேஷம் படமும் வெளியான நிலையில், திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்துள்ளார் ஷிவானி நாராயணன். அங்கே கடைவீதியில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். பிறந்தநாளுக்கு கூட முதலில் கோயிலுக்கு சென்று வந்த புகைப்படங்களை தான் அவர் ஷேர் செய்திருந்தார்.

நெற்றியில் நாமம்

நெற்றியில் நாமம்

திருப்பதிக்கு செல்பவர்கள் அங்கே நெற்றியில் அழகாக நாமம் இட்டுக் கொள்வார்கள், நடிகை ஷிவானி நாராயணனும் தனது நெற்றியில் செம க்யூட்டாக நாமம் போட்டிருக்கும் புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து லைக்குகளை அள்ளி வருகிறார். பழக் கடை, போட்டோ கடை என கடைவீதியில் இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை லைக் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.

12 வருடங்களுக்கு பிறகு

12 வருடங்களுக்கு பிறகு

சிகப்பு மற்றும் வெள்ளை நிற சுடிதாரில் செம க்யுட்டாக திருப்பதியில் ஷிவானி எடுத்துக் கொண்ட போட்டோக்களை ஷேர் செய்து 12 ஆண்டுகளுக்கு பின்னர் திருப்பதிக்கு சென்றுள்ளேன் என்றும் ஷிவானி குறிப்பிட்டுள்ளார். வடிவேலுவுடன் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து வரும் படம், பம்பர் என பல படங்கள் ஷிவானி கைவசம் உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X