ஏன் டல்லா இருக்க.. உடம்பு சரியில்லையா.. இரண்டாவது புரமோவில் பாலாவுடன் பேருக்காக பேசிய ஷிவானி!

சென்னை: பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் வந்த ஷிவானி நாராயணன், வந்த உடனே பாலாவை கண்டுக்கவே இல்லை.

Recommended Video

சென்னை: நான் ஒண்ணும் ‘பச்சா’ இல்லை.. முட்டிக்கிட்ட ஷிவானியும், பாலாவும்..!

இந்நிலையில், இரண்டாவது புரமோவில் ஷிவானியிடம் பேசத் துடித்து அவர் முன் வந்து நின்ற பாலாவிடம் ஏதோ பேருக்காக பேச வேண்டும் என்பது போல ஷிவானி பேசியதே பாலாவை பங்கம் பண்ணியுள்ளது.

பாலா பற்றி வெளியே போனதும் ஷிவானிக்கு உண்மை புரிந்திருக்கும் என்பதே இதன் மூலம் தெரிவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சிங்கப்பெண்ணே

சிங்கப்பெண்ணே

முதல் புரமோவில் ஷிவானியின் வித்தியாசமான என்ட்ரி காட்டப்பட்ட நிலையில், இரண்டாவது புரமோவில் சிங்கப்பெண்ணே என ஷிவானியை நடிகை ரேகா அழைக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. அந்த பாடல் இதயங்களை நொறுக்கி விட்டது என்ற ரேகா, ரொம்ப வலிச்சிருக்குமே என்றார், சனம் ஷெட்டியும் ஷிவானியை பாராட்டினார்.

பூனைக்குட்டி போல

பூனைக்குட்டி போல

முதல் புரமோவில் பாலாவை ஒதுக்கிவிட்டு அர்ச்சனா பக்கம் சென்ற ஷிவானி, இரண்டாவது புரமோவிலும் ரேகா, வேல்முருகன் மற்றும் சனம் ஷெட்டியுடன் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது, ஷிவானியை பூனைக்குட்டி போல சுற்றி சுற்றி வந்து அவருக்கு முன் வந்து நின்று பேச முயன்றார் பாலா.

உடம்பு சரியில்லையா

உடம்பு சரியில்லையா

பாலா தன் முன் வந்து நின்றதும் முன்பு போல அன்பு வழிய ஓடோடி சென்று கட்டிப்பிடித்து, கண்ணீர் விட்டு அழுது புலம்பி கொஞ்சிக் கொள்ளாமல், ஏதோ பேருக்கு பேசுவது போல ஏன் டல்லா இருக்க? உடம்பு சரியில்லையா? என ஷிவானி நலம் விசாரித்த விதத்தை பார்த்த நெட்டிசன்கள் பாலாவின் சுயரூபத்தை ஷிவானி புரிந்து கொண்டார் போல அதான் இப்படி அவரை ஒதுக்குகிறார் என கலாய்த்து வருகின்றனர்.

திருப்பிக் கொண்டு

திருப்பிக் கொண்டு

அப்படியெல்லாம் இல்லை.. ஐ எம் குட் என பாலா சொன்னதும், அடுத்த நொடியே அங்கிருந்து திருப்பிக் கொண்டு ஷிவானி நகர்ந்து செல்ல, எடிட்டர் என்ன பிஜிஎம் போடுவது என தெரியாமல், சோக பிஜிஎம்மை போட்டு இந்த புரமோவை ஓட்டி வருகிறார். என்னடா, இன்னைக்கு முழுவதும் பாலா ஷிவானி சீன் தான் போல என ரசிகர்கள் அப்செட் ஆகி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X