ஷிவானி ஃபுல்கா.. நல்லா புசு புசுன்னு சுட்டு.. ஜெயிச்சிட்டாங்களே.. கப் உங்களுக்குத்தான்!
சென்னை: இனிமேலும், பிக் பாஸ் வீட்டில் யாரையும் மிக்சர் தின்னிகள், பர்கர் தின்னிகள் என சொல்லக் கூடாது என்பதற்காக, தீபாவளி டாஸ்க்குகளை கொடுத்து எல்லோரையும் வேலை வாங்கி விட்டார் பிக் பாஸ்.
ஆப்பிள் தின்னும் போட்டியில் தோற்றாலும், செம சாஃப்ட்டா புசு புசுன்னு ஃபுல்கா சுட்டு ஒட்டு மொத்த ஹவுஸ்மேட்களையும் காலி பண்ணிட்டார்.
பரவாயில்லையே ஷிவானிக்கு நல்லா சமைக்கவும் தெரியும் போல, அடுத்த வாரம் கிச்சன் டீம் தலைவியா இவங்கள ஆக்கிடுங்க என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

2 மில்லியன் ரசிகர்கள்
இன்ஸ்டாகிராம் இளவரசியான சின்னத்திரை நடிகை ஷிவானி நாராயணனுக்கு 2 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். தினந்தோறும் கவர்ச்சியான போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டே அவ்வளவு பெரிய ஆர்மியை சேர்த்து வைத்துள்ளார் ஷிவானி. எவிக்ஷனுக்கு வந்தாலும் ஈஸியாக ஓட்டு விழுந்து விடுகிறது.

பாலாவுக்கு மசாஜ் பண்ணி விடுறாரு
இந்த சீசனில் செம டஃப் ஆன போட்டியாளராக ஷிவானி இருப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தினமும் பாலாஜி முருகதாஸை எழுப்பி விடுவது, அவருக்கு ஊட்டி விடுவது போன்ற வேலைகளை செய்து வருவதால், ஷிவானி பாலாவுக்கு நல்லா மசாஜ் பண்ணி விடத்தான் ஷோவுக்கு வந்தாங்க போல என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

ஆப்பிள் டாஸ்க்கில் தோல்வி
தம்ப் ஷெராட் போட்டியில் கலந்து கொண்டு தோல்வியடைந்த ஷிவானி நாராயணன், நேற்றைய நிகழ்ச்சியில் மகத் கொடுத்த ஆப்பிள் தின்னும் டாஸ்க்கிலும் சம்யுக்தாவிடம் தோற்றார். பாலாவுடன் செங்கல் மேல் ஏறி நடக்கும் டாஸ்க்கில் வெற்றி பெற்றாலும், அதனை அன்சீன் ஆக்கி விட்டனர்.

அடுத்த விளம்பரம்
தீபாவளி பண்டிகை நெருங்கி விட்டதால், ஏகப்பட்ட விளம்பரங்கள் பிக் பாஸ் வீட்டில் டாஸ்க்குகளாக களமிறங்கி வருகின்றன. பிரிஸ்மா, ஆர்.கே.ஜி நெய், ப்ரீத்தி ஸோடியாக் மிக்ஸி விளம்பரங்களை தொடர்ந்து நேற்றைய நிகழ்ச்சியில் ஃபார்ச்சூன் சப்பாத்தி மாவு விளம்பரம் இடம்பெற்றது.

ஃபுல்கா சுடணும்
பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும், ஏற்கனவே நல்லா பிசைந்து கொடுக்கப்பட்ட சப்பாத்தி மாவில், புசு புசுன்னு ஃபுல்கா சுடணும் என சூப்பரான டாஸ்க் கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு போட்டியாளர்களும் ஃபுல்கா ட்ரை பண்ணி 'பாதிக்கா' செய்து சொதப்பினர். மாவு மட்டும் பிசைய சொல்லியிருந்தா தெரிஞ்சிருக்கும்.

ஷிவானி ஃபுல்கா
ஷிவானி நாராயணன் எந்த போட்டியிலும் சோலோவா ஜெயிக்கல என்கிற இமேஜை உடைத்து விட்டார். ஃபுல்கா சுடும் போட்டியில் அத்தனை போட்டியாளர்களையும் தூக்கி சாப்பிடும் அளவுக்கு நல்லா கட்டமா ஃபுல்கா சுட்டு ஜெயித்து விட்டார். கடைசியா, சனம் ஷெட்டிக்கும் அவருக்கும் இடையே நடந்த போட்டியிலும், ஷிவானி ஜெயித்து பரிசை வென்றார். அந்த ஐடியா செம.. வட்டமா மத்தவங்க சுடும்போது, கட்டமா சுட்டு அசத்திட்டார்.


Click it and Unblock the Notifications











