விஜய்சேதுபதியின் ஸ்டேஷன்ல ஷிவானி தான் லேடி போலீஸா? இயக்குநர் பொன்ராம் உடன் ஒரு கூல் போட்டோ!
சென்னை: வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை இயக்கிய இயக்குநர் பொன்ராம் உடன் பிக் பாஸ் பிரபலம் ஷிவானி நாராயணன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து வந்த ஷிவானி நாராயணன் பிக் பாஸ் தமிழ் 4 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு கலக்கினார்.
சினிமாவில் அவரை காண ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில், விஜய்சேதுபதியின் படத்தில் ஷிவானி நடித்து வருவது கன்ஃபார்ம் ஆகி உள்ளது.

பிக் பாஸ் டு சினிமா
விஜய் டிவி பிரபலங்களை சினிமா நட்சத்திரங்களாக மாற்றும் முயற்சியாகவே பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது மாறிவிட்டது. கடந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட ஷிவானி நாராயணன் நடிகர் விஜய்சேதுபதி உடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியது.

காக்கி யூனிஃபார்மில்
இந்நிலையில், சமீபத்தில் காக்கி யூனிஃபார்மில் நடிகை ஷிவானி நாராயணன் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களின் லைக்குகளை அள்ளின. எந்த படத்தில் இப்படியொரு கெட்டப்பில் நடிக்கிறீங்க ஷிவானி என ஏகப்பட்ட ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். முன்னதாக கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் ஷிவானி நடித்து வருவதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் படத்தில் இல்லையா
ஆனால், தற்போது இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் தான் நடித்து வருகிறேன் என ஷிவானியே உறுதிபடுத்தி உள்ளார். இதன் மூலம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் உலகநாயகனின் விக்ரம் படத்தில் ஷிவானி நடிக்கவில்லை என தெரிகிறது. மைனா நந்தினி மற்றும் மகேஸ்வரி உள்ளிட்டோர் அந்த படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

பொன்ராம் இயக்கத்தில்
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பொன்ராம். தொடர்ந்து ரஜினிமுருகன், சீமராஜா என சிவகார்த்திகேயனை வைத்து 3 படங்களை இயக்கினார். சமீபத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் சசிகுமார் நடிப்பில் வெளியான எம்ஜிஆர் மகன் படத்தையும் இவர்தான் இயக்கி இருந்தார். இந்நிலையில், இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் ஷிவானி நடித்து வருவது உறுதியாகி உள்ளது. தற்போது அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஷிவானி ஷேர் செய்து சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

லேடி போலீஸ்
பொன்ராம் இயக்கத்தில் போலீஸ் அதிகாரியாக விஜய்சேதுபதி நடித்து வரும் நிலையில், ஷிவானி நாராயணன் அதே ஸ்டேஷனில் பணிபுரியும் லேடி போலீஸாக நடித்து வருகிறாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் விஜய்சேதுபதியின் 46வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

யார் ஹீரோயின்
நடிகை அனு கீர்த்தி வாஸ் தான் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக இந்த படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், ஷிவானியும் இந்த படத்தில் நடித்து வரும் நிலையில், யார் ஹீரோயின் என்கிற சந்தேகமும் கிளம்பியுள்ளது. அனு கீர்த்தி வாஸ் ஹீரோயின் என்றால் ஷிவானி செகண்ட் ஹீரோயினா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. சீக்கிரமே படம் வெளியானால் அனைத்திற்குமான விடை கிடைத்து விடும்.


Click it and Unblock the Notifications











