Shivani Narayanan: கடவாப் பல்லை புடுங்கிட்டாங்க.. ரத்தமாரே பாடலை போட்டு ஓவர் எமோஷனலான ஷிவானி!

சென்னை: பிக் பாஸ் பிரபலம் மற்றும் கோலிவுட்டின் இளம் நாயகியான ஷிவானி நாராயணன் தனது கடைவாய்ப் பல்லை பிடுங்கிய நிலையில், தனக்கு தனது தாய் எப்படி பணிவிடை செய்தார் என்கிற வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது பதிவிட்டு உருகியுள்ளார்.

சின்னத்திரை நடிகையாக விஜய் டிவியில் வலம் வந்த ஷிவானி நாராயணன் பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக பங்கேற்று ஏகப்பட்ட ரசிகர்களை மட்டுமின்றி பல சினிமா பிரபலங்களின் பார்வைகளையும் தன் பக்கம் ஈர்த்தார்.

Shivani Naryaanan gets emotional while her mother care after plucks wisdom tooth recently

அந்த நிகழ்ச்சிக்கு பிறகு கமல் தயாரித்து நடித்த விக்ரம் படத்திலேயே விஜய்சேதுபதிக்கு ஜோடியாக சினிமா என்ட்ரி சூப்பராக அமைந்தது.

விக்ரம் முதல் பம்பர் வரை: கடந்த ஆண்டு விக்ரம் படத்தில் ஆரம்பித்த ஷிவானி நாராயணனின் சினிமா வாழ்க்கை தொடர்ந்து வீட்ல விசேஷம், டிஎஸ்பி, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், சமீபத்தில் வெளியான பம்பர் திரைப்படம் என ஒரு வருஷத்தில் ஒட்டுமொத்தமாக 5 படங்களில் நடிக்க வாய்ப்புகள் அடுத்தடுத்து அமைந்த நிலையில், சந்தோஷத்தின் உச்சிக்கே சென்று விட்டார் ஷிவானி நாராயணன்.

Shivani Naryaanan gets emotional while her mother care after plucks wisdom tooth recently

கொஞ்ச நாள் ரெஸ்ட்: அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு முன்பாக கொஞ்ச நாட்கள் ரெஸ்ட் விட்டு விட்டு நடிகை ஷிவானி நாராயணன் தனது அம்மாவுடனும் இன்ஸ்டாகிராம் ரசிகர்களுடன் அதிக நேரத்தை தினமும் செலவிட்டு வருகிறார்.

5 மணி பஸ்ஸாக இருந்த ஷிவானி மீண்டும் அதே போல தற்போது தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களை அதிரடியாக உயர்த்தும் நோக்கில் செயல்பட்டு வருகிறார். அமலா ஷாஜியை விட ஷிவானிக்கு குறைவாக சுமார் 3.8 மில்லியன் ரசிகர்கள் தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Shivani Naryaanan gets emotional while her mother care after plucks wisdom tooth recently

கடவாய்ப் பல்லை பிடுங்கிட்டாங்க: 22 வயதாகும் ஷிவானி நாராயணனுக்கு சமீபத்தில் தான் ஞானப்பல் என சொல்லப்படும் கடவாய்ப் பல்லே முளைத்திருக்கும். இந்நிலையில், அதற்குள் கடந்த வாரம் அந்த பல்லை பிடுங்கி விட்டதாகவும், அதன் பின்னர் தன்னை அம்மா எப்படியெல்லாம் கவனித்துக் கொண்டார் என்பதை காட்ட எடுத்த வீடியோவை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ரத்தமாரே பாடலுடன் ஃபீலிங்ஸ்: பிக் பாஸ் வீட்டில் பாலாவுடன் பழகி வந்த ஷிவானிக்கு அந்த டோஸ் விட்ட அவரது அம்மா தற்போது மகளுக்கு கடவாய் பல்லை பிடுங்கிய நிலையில், அவருக்கு பணிவிடை செய்யும் காட்சிகளை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் போட்டுள்ளார். அதற்கு ஜெயிலர் படத்தின் ரத்தமாரே பாடலை மிக்ஸ் செய்து போட்டு அம்மாவின் அன்பு தான் எப்போதுமே பெரியது என உருகியுள்ளார் ஷிவானி நாராயணன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X