ஹட்ச் டாக் மாதிரி ஆகிட்டியே ஷிவானி.. மூணாவது புரமோவிலும் அதே மூஞ்சியா சகிக்கல.. வேற ஏதும் இல்லையா?

சென்னை: தொடர்ந்து மூன்றாவடு புரமோவிலும் பாலாஜி முகத்தை காட்டி சோதித்து விட்டார் பிக் பாஸ் எடிட்டர்.

முதல் புரமோவில் ஜெயிலுக்கு போவதும், இரண்டாவது புரமோவில் சுச்சியுடன் சண்டை போடுவதும், மூன்றாவது புரமோவில் ஷிவானி பாலாவை பிரிந்து ஏங்குவதுமாக வச்சி செய்துள்ளனர்.

ஷிவானியை ரம்யா பாண்டியன் கலாய்க்கிறது தான் செம ஹைலைட்.

கொச்சை படுத்துறீங்க

கொச்சை படுத்துறீங்க

அண்ணன் தங்கை உறவு என சொல்லிக் கொண்டு ஷிவானி நாராயணனும், பாலாஜி முருகதாஸும் பண்ணும் காதல் லீலைகளை பிக் பாஸ் போட்டியாளர்களே கலாய்ப்பதும், எடிட்டர் அதுக்கு மேல, ரொமான்ட்டிக் பாடல்களையும், காதல் சோக பாடல்களையும் போட்டுக் கொல்வது தாங்க முடியவில்லை.

எல்லை மீறி

எல்லை மீறி

நேற்றைய நிகழ்ச்சியின் அன்சீனில் ஷிவானி நாராயணனை அத்தனை பேர் முன்னிலையில், டைனிங் டேபிளில் உட்கார்ந்து கொண்டு மடியில் சாய்த்து பாலா செய்த சில்மிஷம் எல்லாம் இரண்டாம் குத்து படத்தை விட மோசமாக இருக்கிறது. காதல் பண்றாங்களா? கன்றாவி பண்றாங்களான்னே தெரியல? ரொம்ப எல்லை மீறி போகின்றனர்.

எங்க போன ராசா

எங்க போன ராசா

பாலாஜி முருகதாஸ் எதை பண்ணாலும், எட்டி உதைத்தாலும் பல்லை இழித்துக் கொண்டு பின்னாடியே போகிறார் ஷிவானி நாராயணன். அதற்கு எங்க போன ராசா என ஏ.ஆர். ரஹ்மான் பிஜிஎம் வேற போட்டு பில்டப் கொடுத்து ரசிகர்களை ரொம்பவே சோதிக்கிறாங்க, மூணாவது புரமோவிலும் இதே மூஞ்சியா என பயந்து ஓடுகின்றனர்.

எப்படி இருக்கப் போற ஷிவானி

எப்படி இருக்கப் போற ஷிவானி

எதிரியை விட துரோகிகள் தான் பிக்பாஸ் வீட்டில் அதிகம். சம்யுக்தா, ஷிவானியை பார்த்து ஒரு நாள் பாலாவை பிரிந்து எப்படி இருக்கப் போற ஷிவானி என கேட்டு பங்கம் பண்ணி விட்டார். சரி விடு நாங்கலாம் இருக்கிறோம் என அவர் கூறும் ஆறுதலை பார்த்தால், நாம பார்க்காத சீன்லையும் ரெண்டும் ஜோடியாத் தான் திரியுதுங்க என்பது உறுதியாகி விட்டது.

டைரக்ட் தாக்குதல்

டைரக்ட் தாக்குதல்

சம்யுக்தாவிடம் பாலா மாமா.. பாலா மாமான்னு ஷிவானி பின்னாடியே சுத்துறா என ரம்யா பாண்டியன் கலாய்த்த நிலையில், இன்று டைரக்ட் தாக்குதலாக, இன்னைக்கு ஒரு நாளாவது நீ எங்க கூட இருப்பன்னு எதிர்பார்க்கிறோம் என ரம்யா பாண்டியன் நேரடியாவே ஷிவானியை வறுத்து எடுத்து விட்டார்.

ரொம்ப ஏக்கமோ

ரொம்ப ஏக்கமோ

ப்பா.. பெத்த அம்மாவை இத்தனை நாள் பிரிஞ்சு இருக்கிறதுக்கு கூட ஷிவானி இவ்ளோ ஃபீல் பண்ணல, பாலாவோட ஒரு நாள் ஒட்டி உரச முடியலையேன்னு கண்ணாடி முன்னாடி ரொம்ப ஃபீலிங்கா ஷிவானி நின்னு பார்க்கிறதை பிக் பாஸ் போட்டியாளர்களாலேயே பார்க்க முடியல, ஜித்தன் ரமேஷ், அப்படியே சைடு கேப்பில் தோள் மேல கைப் போட்டு ஆதரவு கொடுக்க ஆரம்பித்து விட்டார்.

Recommended Video

பெண்டு நிமிர்த்த தொடங்கிய பிக் பாஸ் | Day 44 | மணிகூண்டு Task
ஹட்ச் டாக்

ஹட்ச் டாக்

சம்யுக்தாவை பப்பட்டாக வைத்திருக்கும் பாலாஜி முருகதாஸ், 2 மில்லியன் ரசிகர்களை வைத்திருக்கும் இன்ஸ்டாகிராம் இளவரசியான ஷிவானி நாராயணனை ஹட்ச் டாக் மாதிரி மாத்தி வச்சிருக்காரே என 3வது புரமோவை பார்த்து ரசிகர்கள் வாய் பிளந்துள்ளனர். வரவங்க போறவங்களாம் கலாய்க்கிறாங்கன்னா, நீ பண்ற காரியம் அப்படி ஷிவானி என்றும் கழுவி ஊற்றி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X