Shivani Narayanan: இப்படி நச்சு நச்சுன்னு கொடுத்தா இதயம் தாங்காது ஷிவானி.. ஃபீல் பண்ணும் ஃபேன்ஸ்!
சென்னை: பிக் பாஸ் பிரபலமும் பம்பர் பட ஹீரோயினுமான ஷிவானி நாராயணன் தனது வீட்டில் குட்டி டவுசருடன் தனது செல்ல நாய்க்குட்டிகளுக்கு முத்தம் கொடுத்து கொஞ்சும் புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை ரொம்பவே வெறுப்பேற்றி வருகிறார்.
சின்னத்திரை நடிகையாக அறிமுகமான இளம் நடிகை ஷிவானி நாராயணன் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி ரீல்ஸ் மற்றும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பிக் பாஸுக்கு செல்வதற்கு முன்பே 20 லட்சம் ரசிகர்களை தனது ஃபாலோயர்களாக கொண்டிருந்தார்.

பிக் பாஸுக்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் ஷிவானி நாராயணன் நடிப்பில் சமீபத்தில் வெளியான பம்பர் படம் நல்ல வரவேற்பை பெற்றது.
ஷிவானிக்கு அடித்த பம்பர்: பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக நடிக்க கிடைத்த பம்பரை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஷிவானி நாராயணன் அடுத்ததாக கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் விஜய்சேதுபதியின் மனைவியாக கோலிவுட்டில் கிடைத்த என்ட்ரியையும் கச்சிதமாக கைப்பற்றி நடித்தார்.
கம்பேக் கொடுத்த வடிவேலுவின் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் கவர்ச்சிப்புயலாக வந்த ஷிவானி வெற்றி நடிப்பில் கடந்த வாரம் வெளியான பம்பர் படத்தில் தூத்துக்குடி பெண் கதாபாத்திரத்தில் நடித்து தூள் கிளப்பினார்.
நாய்க்குட்டிகளுக்கு முத்தம்: ஒரு சின்ன கேப்பிற்கு பிறகு மீண்டும் இன்ஸ்டாகிராமில் தனது ஹாட்டான க்யூட்டான போட்டோக்களை அடுக்கி ரசிகர்களை மயக்கி உள்ளார் ஷிவானி நாராயணன்.
தனது வீட்டில் வளர்த்து செல்ல நாய்க்குட்டிகளை தூக்கி கொஞ்சியபடியும், அவற்றுக்கு முத்த மழை பொழியும் போட்டோக்களை பதிவிட்டும் ஏகப்பட்ட இளைஞர்களை ஏங்க வைத்துள்ளார் ஷிவானி நாராயணன்.
குட்டி டவுசர்: ஷூட்டிங் எல்லாம் முடிந்து வீட்டில் மீண்டும் ஹாயாக ரெஸ்ட் எடுத்து வரும் ஷிவானி நாராயணன் குட்டி டவுசர் அணிந்து கொண்டு நாய்க்குட்டிகளை தூக்கி மடியில் வைத்துக் கொஞ்சுவதை பார்த்து ஏகப்பட்ட ரசிகர்களுக்கு பொறாமையே வந்து விட்டது.

இப்படியெல்லாம் எங்களை வெறுப்பேற்றக் கூடாது ஷிவானி என கமெண்ட்டு பக்கத்தில் பலரும் கதறி வருகின்றனர். விக்ரம், வீட்ல விசேஷம், நாய்சேகர் ரிட்டர்ன்ஸ், டிஎஸ்பி, பம்பர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ஷிவானி அடுத்து என்ன படத்தில் நடிக்கப் போகிறார் என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். விரைவில் தனது அடுத்த படம் குறித்த அப்டேட்டையும் ஷிவானி வெளியிடுவார் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











