சோமசேகருக்கு ஓட்டுப் போட்ட ஷிவானி.. ஓங்கியது ஆரியின் ’கை’.. புலம்பித் தவிக்கும் சாம், பாலா!
சென்னை: இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் சிறப்பாக செயல்பட்டது யார் என்கிற கேள்வியை பிக் பாஸ் கேட்க, ஏகப்பட்ட பேர் ஆரிக்கு ஆதரவாக குரல் எழுப்பி சம்யுக்தாவின் மூக்கை பதம் பார்த்துள்ளனர்.
மறுபுறம் சோமசேகருக்கு ஆதரவாக ஷிவானி உள்ளிட்டோர் குரல் கொடுத்து, பயில்வானுக்கு பல்பு கொடுத்துள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஓங்கியது ஆரியின் கை
நீதிமன்றம் டாஸ்க்கில் நடிகர் ஆரி சிறப்பாக செயல்பட்டார் என நிஷா, சனம் ஷெட்டி, அனிதா சம்பத், ஆஜீத், ஜித்தன் ரமேஷ் உள்ளிட்டோர் ஓட்டுப் போட்டு ஆரியின் கையை ஓங்க வைத்துள்ளனர் என்பதை முதல் புரமோவில் காட்டி தலைவிக்கு கொஞ்சமும் தகுதி இல்லாத சம்யுக்தாவுக்கு சரியான அடி கொடுத்துள்ளனர் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

சோமசேகருக்கு ஓட்டுப் போட்ட ஷிவானி
அர்ச்சனா, பாலாஜி முருகதாஸ், ஷிவானி நாராயணன், ஆரி, நிஷா உள்ளிட்ட பல ஹவுஸ்மேட்கள் சோமசேகருக்கு இந்த முறை தங்களின் ஓட்டுக்களை போட்டுள்ளனர். ஷிவானி செல்லக்குட்டி, சோமுக்கு நிறைய ability (திறமை) இருக்கு என சொன்னதை பார்த்த ரசிகர்கள், இப்போ தான் மா சரியா பேசி இருக்க என பாராட்டி வருகின்றனர்.

ஜகா வாங்கிய பாலா
கடந்த வாரம் பிக் பாஸ் சீசனில் சோமசேகர் தலைவர் பொறுப்பேற்று பிக் பாஸ் எவிக்ஷனில் இருந்து தப்பித்து இருக்க வாய்ப்பு கிடைத்த நிலையில், அதனை தள்ளி விட்டது பாலா தான். பப்பட் என சோமசேகரை பார்த்து கிண்டல் பண்ண பாலா, இந்த புரமோவில் அப்படியே ஜகா வாங்கி, என்னால தான் அவர் தலைவர் ஆகுறது மிஸ் ஆனது என ஃபீல் பண்ணி அவருக்கு ஆதரவாக ஓட்டுப் போட்டார்.

காண்டான சம்யுக்தா
எல்லோரும் ஆரி பிரதரை தூக்கிக் கொண்டாட ஆரம்பித்ததும், சம்யுக்தா முகத்தை பார்க்கணுமே, லக்ஷ்மி திடீர்னு காளியாகவே மாறிட்டாங்க, எல்லாருமே ஆரிக்கு ஓட்டுப் போட்டு சம்யுக்தாவுக்கு சரியான சவுக்கடி கொடுத்ததை உணர்ந்து கொண்ட அவர், வெளியே தனது பப்பட்களுடன் புலம்ப ஆரம்பித்தார்.

பாலாஜியை கார்னர் பண்றாங்களாம்
சம்யுக்தா தனது புலம்பலை பாலாவிடம் சொல்ல நினைத்தால், உடனே உஷாராகிய பாலா, ஏன்னா பாலாஜி தான் இந்த வீட்டில் கார்னர் செய்யப்படுகிறான் என தனது புலம்பலை கூறி விட்டு, அடுத்த வார தலைவருக்கு சொம்பு தூக்க சென்று விட்டான். பாவம் டம்மி மம்மியின் நிலைமை இப்படி ஆகிடுச்சே!

யார் தலைவர்
சோமசேகரை இந்த வாரம் தலைவராக்கினால், அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறாமல் காப்பாற்றப்படுவார். ஆனால், அனைவரும் சேர்ந்து நடிகர் ஆரியை தான் அடுத்த வாரத்திற்கான தலைவராக ஆக்குவார்கள் போல தெரிகிறது. பிக் பாஸ் வீட்டின் அடுத்த வாரத் தலைவர் யார்? என்பதையும் ஜெயிலுக்கு போகும் அந்த மிக்சர் தின்னிகள் யார் என்பதையும் தெரிந்து கொள்ள இன்றைய நிகழ்ச்சியை காண ரசிகர்கள் இப்பவே ஆர்வமாகி விட்டனர்.

தமிழ் எங்கே போச்சு
நேற்று தேவையில்லாத ஆணியாக அந்த சீனை ஏன் தான் வைத்தார்களோ தெரியவில்லை. தொடர்ந்து பாலா, சம்யுக்தா, ஷிவானி என எல்லோருமே ஆங்கிலத்தில் தான் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். தலைவி சம்யுக்தா, பிக் பாஸ் கட்டளையிட்டும் அதனை கொஞ்சம் கடைபிடிக்காமல் தன் பிரச்சனையை மட்டுமே பார்த்து வருவதையும் ரசிகர்கள் சுட்டிக் காட்டி வெளுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











