வேகமாக காரை ஓட்டிச் சென்று விபத்தில் சிக்கிய வாரிசு நடிகை
ஹைதராபாத்: நடிகை ஜீவிதாவின் மகள் ஷிவானி வேகமாக காரை ஓட்டிச் சென்று விபத்தில் சிக்கியுள்ளார்.
நடிகர் ராஜசேகர், நடிகை ஜீவிதாவின் மூத்த மகள் ஷிவானி. தந்தை வழியில் மருத்துவம் படித்துக் கொண்டிருக்கிறார். மேலும் படம் ஒன்றில் நடித்துக் கொண்டும் இருக்கிறார்.
இந்நிலையில் ராஜசேகர் மகளுக்கு புது கார் வாங்கிக் கொடுத்துள்ளார்.

விபத்து
புது காரில் ஷிவானி ஹைதராபாத்தில் உள்ள ஜுபிலி ஹில்ஸ் பகுதி அருகே வேகமாக சென்றுள்ளார். வேகத்தடை இருந்ததை கவனிக்காமல் அதில் ஏற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த புது ஜீப் மீது மோதியது.

தொழில் அதிபர்
இந்த விபத்தில் ஷிவானிக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. ஜீப் மோசமாக சேதம் அடைந்தது. ஜீப்பின் உரிமையாளரான பிரபல தொழில் அதிபர் ஷிவானி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஜீவிதா
தனக்கு புது ஜீப் வாங்கித் தருமாறு அந்த தொழில் அதிபர் தெரிவித்துள்ளார். போலீஸ் கேஸ் வேண்டாம் நாமே பேசித் தீர்ப்போம் என்று ராஜசேகர் தொழில் அதிபரிடம் தெரிவித்துள்ளார்.

பேச்சு
ஷிவானி காரை ஓட்டிச் சென்றது குறித்து சமூக வலைதளங்கள், டோலிவுட்டில் பேச்சாகக் கிடக்கிறது. ராஜசேகர் குடும்பத்தார் இந்த சம்பவத்தால் கவலையில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











