அந்த ரீமேக் படம் நின்னு போச்சு..'காதல் கதை'யில் ஹீரோயினாக அறிமுகமாகும் பிரபல நட்சத்திர ஜோடி மகள்

By

சென்னை: பிரபல நட்சத்திர தம்பதியின் மகள், ஹீரோயினாக அறிமுகமாக இருக்கிறார்.

தமிழ் பட உலகில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர், ஜீவிதா. தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தார்.

தமிழில் தப்புக் கணக்கு, கடமை கண்ணியம் கட்டுப்பாடு, ராஜமரியாதை, தர்மபத்தினி, இளமை, நானே ராஜா நானே மந்திரி உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

நடிப்பில் ஆர்வம்

நடிப்பில் ஆர்வம்

இவர் இதுதான்டா போலீஸ் படத்தில் நடித்த டாக்டர் ராஜசேகரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஷிவானி, ஷிவாத்மிகா ஆகிய இரண்டு மகள்கள். இதில் ஷிவானி, சினிமாவில் நடிக்க ஆர்வம் கொண்டிருந்தார். இதையடுத்து கடந்த சில வருடங்களுக்கு முன், தமிழ், தெலுங்கில் அவரை அறிமுகப்படுத்த ஜீவிதாவும் ராஜசேகரும் முடிவு செய்தனர்.

கருத்து வேறுபாடு

கருத்து வேறுபாடு

இதற்காக இந்தியில் சூப்பர் ஹிட்டான 2 ஸ்டேட்ஸ் படத்தில் ரீமேக்கில் நடிக்க வைக்க முடிவு செய்தனர். இந்தப் படம் கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதிவி சேஷ் ஹீரோவாக நடிக்க முடிவு செய்யப்பட்டது. அபிஷேக் வர்மன் இயக்க இருந்தார். ஷூட்டிங் தொடங்கிய நிலையில் இயக்குனரும் தயாரிப்பாளருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, படம் நின்றுவிட்டது.

உயரம் காரணமாக

உயரம் காரணமாக

இதையடுத்து வேறு படத்தில் அவரை அறிமுகப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டனர். இந்நிலையில் அவரது தங்கை ஷிவாத்மிகா, தோராசானி என்ற படம் மூலம் கடந்த வருடம் ஹீரோயினாக அறிமுகமானார். தனக்கு வாய்ப்பு கிடைக்காதது பற்றி ஷிவானி, 'பல படங்களின் ஆடிஷனுக்கு சென்றிருந்தேன். என் உயரம் காரணமாக நிராகரிக்கப்பட்டேன்.

Recommended Video

Full Video: Quarantine Dance | Sayyeesha, Jhanvi Kapoor, Jwala Gutta, Mahima Nambiar
கல்லூரி மாணவி

கல்லூரி மாணவி

சினிமா பின்னணி இருந்தாலும் வாய்ப்பு கிடைக்காது என்பதற்கு நான் உதாரணம் என்று கூறியிருந்தார். இந்நிலையில் நீண்ட நாள் காத்திருப்புக்கு பலன் கிடைத்திருக்கிறது. புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் ஷிவானி. காதல் கதையான இதை மாலிக் ராம் இயக்க இருக்கிறார். தேஜா சஜ்ஜா ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தில் ஷிவானி, கல்லூரி மாணவியாக நடிக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X