போட்டுத்தாக்கு...சிம்பு பாடலுக்கு கெட்ட ஆட்டம் போட்ட ஷிவானி
சென்னை : விஜய் டிவி.,யில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஷிவானி நாராயணன். இதில் இவரது க்யூட்டான நடிப்பு, ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்தது.
தொடர்ந்து விஜய் டிவி.,யில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி 3, கடைக்குட்டி சிங்கம், ராஜா ராணி, ரெட்டை ரோஜா ஆகிய சீரியல்களில் நடித்தார். அதைத் தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

பாலாஜியுடன் காதல்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜி முருகதாஸுடன் காதல் கிசுகிசுக்களில் அடிப்பட்ட ஷிவானி, பிறகு வலுவான போட்டியாளராக மாறிய நிலையில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மிகவும் பிரபலமடைந்தார் ஷிவானி.

கவர்ச்சி ஃபோட்டோக்கள் பிரபலம்
சமூக வலைதளங்களிலும் படு ஆக்டிவாக மாறி ஷிவானி, கவர்ச்சியாக போஸ் கொடுத்து ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வந்தார். இவர் பதிவிடும் வீடியோக்கள், ஃபோட்டோக்கள் பலவும் வைரலாக்கப்படுவது வழக்கம்.

பிகினியில் கலக்கிய ஷிவானி
சமீபத்தில் மாலத்தீவு சென்ற ஷிவானி, அங்கு பிகினி ஃபோட்டோக்களையும், தொடையழகை காட்டிய ஃபோட்டோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். தொடர்ந்து புடவையில் கவர்ச்சி காட்டியும், கண்ணாடி முன் நின்றும் இவர் வெளியிடும் ஃபோட்டோக்களும் மிகவும் பிரபலம்.

குத்தாட்டம் போட்ட ஷிவானி
இந்நிலையில் ஒரு மார்க்கமாக தாவணி அணிந்து, கண்ணாடி முன் நின்று ஷிவானி குத்தாட்டம் போட்ட வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. குத்து படத்தில் சிம்பு - ரம்யா கிருஷ்ணன் நடித்த, போட்டு தாக்கு பாடலுக்கு தான் ஷிவானி ஆட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோவை இதுவரை ஒன்றரை லட்சம் பேர் பார்த்து, லைக் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











